பக்கம்:அழகர் கோயில்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

258 அழகர்கோயில் நற்றிணையில் (78! வந்துள்ளது. அதுபோலவே திருமுகாற்றுப் படையில் 'பழமுதிர்சோலைமலை' என்பது குறிக்கப்பட்டுள்ளது' என்று விளக்குவதோடு, பழமுதிர்சோலை என ஒரு மலை முரு கனுக்கு உரியது என்பதற்கோ, அம்மலை அழகர்மலையே என்ப தற்கோ அங்கு முருகன் கோவில் இருந்தது என்பதற்கோ சங்க நூல்களி லும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் சான்று இல்லை” என்று மேலும் தெளிந்த முடிவினைக் கூறுகிறார் இராசமாணிக்கனார். 16 அப்படியானால், 'ஆறுபடைவீடு' என்ற வழக்கு எப்படி வந்தது? நக்கீரர் பாடிய ஆற்றுப்படை இலக்கியம் முருகனது வீதி மலைச் (தலங்களை) குறித்தது. திருப்பரங்குன்றம், திருச்சீரலை வாய், திருஆவிநன்குடி, திருவேரகம் ஆகியன நாக்கீரர் காட்டும் ஆற்றுப்படை வீடுகளாகும். 'ஆற்றுப்படைவீடு' என்னும் சொல்லே மக்கள் வழக்கில் 'ஆறுபடைவீடு' எனத் திரிந்தது. எனவேதான் முருகாற்றுப்படையில் வரும் குன்றுதோறாடல், பழமுதிர்சோலை லலை என்னும் இரண்டு சொற்களையும் இரண்டு முருகன் திருப்படு களின் பெயர்கள் என்று த.பறாகக் கருத இடமேற்பட்டது. பதினான்காம் நூற்றாண்டினரான கந்தபுராண ஆசிரியர் திருமுருகாற்றுப்படை கூறும் பரங்குன்றம் அலைவாய். ஆவிநன்குடி, ஏரகம் ஆகியவற்றைப் போலக் குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய தொடர்களும் இரு முருகன் தலங்களின் பெயர்கள் என்று கொண்டு, தம் நூற்பாயிரத்தில், “திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவோம்" "சீரலை வாய்வரு சேயைப் போற்றுவோம்' ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவோம்' "ஏாகத் தறுமுகன் அடிகள் ஏத்துவோம் ‘“குன்றுதோ றாடிய குமரற் போற்றுவோம்" பழமுதிற் சோலையம் பகவற் போற்றுவோம்' அருண என்று பாடுகிறார்.: பதினைந்தாம் நூற்றாண்டினரான கிரிநாதரும் இக்கருத்தினை அடியொற்றிப் பழமுதிச்சோலை என் றொரு முருகன் தலம் சோலைமலை (அழகர்மலை)யிலே இருந்த தாகப் பாடுகிறார். இத்தவறான கருத்தின் அடிப்படையில்தான் இன்றிருக்கும் அழகர்கோயிலே பழமுதிர்சோலை எனச் சிலர் வாதிட முற்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/265&oldid=1468142" இலிருந்து மீள்விக்கப்பட்டது