பக்கம்:அழகர் கோயில்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு 265 திருமாலிருஞ் மொழிச் சொல் 'கலப்பை' என்று பொருள்படும். சோலையில் நேமியும் கலப்பையும் பொலிந்து நிற்பதாகப் பரிபாடலில் (15) இளம்பெருவழுதியார் பாடுகிறார். தொல்காப்பியர் மருதநில மக்களாகிய உழவர்களின் தெய்வ மாக வேந்தன் எனப்பெறும் இந்திரனைக் குறிப்பிடுகின்றார். இந்நிரன் உழுதொழிலுக்கு வேண்டிய மழை தரும் தெய்வம். பலராமனைப் பற்றிய செய்திகளிலிருந்து பலராமனும் உழவர்களின் தெய்வமாவே விளங்கியது தெளிவு. ‘பலராமனுக்கு கலப்பைதான் ஆயுதம் என்று கூறுவதால் இவர் உழவர்களின் தெய்வமாக ஆகிவிட்டார்" என்கிறார் அக்னி கோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். 3 இன்று தமிழ்நாட்டில் இந்திர வழிபாடும் இல்லை. பலராமன் (வாலியோன்) வழிபாடும் இல்லை. உழவர்களின் தெய்வ வழிபாடு எவ்வாறு மறைந்தது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் பலராம வழிபாடு நிகழ்ந்ததற்கு இலக்கியங் கனைத் தவிர ஒரு சிற்பச்சான்றும் உள்ளது. மாமல்லபுரத்தில் "ருஷ்ண மண்டபத்தில் கிருஷ்ணன், பலராமன், நப்பின்னை ஆகிய மூவரும் இணைந்து திற்கும் ஒரு சிற்பம் உள்ளது.' இச் சிற்பம் ஏறத்தாழ கி.பி. ஏழாம் நூற்றாண்டினது என்பர்.5 "உடுப்பிக்கருகிலுள்ள குடவூர் என்ற கிராமத்தில் அதிசய மாக ஒரு பலராமர் கோயில் உள்ளது” என்று பி.ஆர். ஸ்ரீ,நிவாசன் கூறுகிறார்.6 சங்க இலக்கியங்களில் புறநானூறும், பரிபாடலும் பலராமனைத் திருமாலோடு சேர்த்து அவனுக்கு உடன்பிறந்தவனைப் போலக் குறிக் கின்றன. கபிலரும் நற்றிணையில் ஒரு குறிஞ்சித்திணைப் பாடவில், “மாயோன் அன்ன மால்வளாக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்குவெள் ளருவி”T என இருவரையும் ஒருசேரக் குறிக்கிறார். பரிபாடலும், கடலும் கானலும் போலவும் சொல்லும் பொருளும் போலவும் விளங்குவ தாக இருவரையும் குறிக்கிறது. திணைமாலை நூற்றைம்பதில் ஒரு பாடலும் (58), யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடலொன்றும் (78). இலக்கணவிளக்கம் 738ஆம் சூத்திர மேற்கோள் பாடலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/272&oldid=1468149" இலிருந்து மீள்விக்கப்பட்டது