பக்கம்:அழகர் கோயில்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் வாலியோன் (பலராமன்) வழிபாடு 271 திருமாலிருஞ்சோலைக் கோயிலின் வழிவழி அடியாரில் உழுதொழில் செய்வோர் (Harijans) பெருந்தொகையினராக இருப்பது, வைணவத் தின் முயற்சி தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஓரளவு வெற்றிபெற்றது என்பதைக் காட்டுகிறது. இந்திர வழிபாட்டின் வீழ்ச்சியோடு. பலராமனும் திருமால் வழிபாட்டில் இணைந்து மறைந்துவிடுகின்றான். ஆயினும் பலராம (வாலியோன் ) வழிபாட்டின் எச்சமாக வெள்ளையன், வெள்ளைச் சாமி, வெள்ளைக்கண்ணு என்ற பெயர்கள் பாண்டிய நாட்டில் இன்னும் வழங்கக் காணலாம். வாலியோன் என்ற சொல்லுக்கும் 'வெள்ளையன்' என்றே பொருள். கருப்புநிறச் சாமியாகிய கண்ண னிடமிருந்து வேறுபடுத்தவும், கண்ணனின் அண்ணன் என்ற தொடர்பைக் காட்டவும் வெள்ளைக்கண்ணு (கண்ணன்). வெள்ளைச் சாமி என்ற பெயர்கள் பயன்படுகின்றன. சின்னக்கண்ணு (கண்ணன்). மலைக்கண்ணு (கண்ணன்) முதலிய பெயர்களுக்கு முன்னொட்டாக வரும் சொற்களும் இக்கருத்தை வலியுறுத்தும். அதைப்போலவே மதுரைப்பகுதியில் உலக்கையன், முத்துலக்கையன் என்று வழங்கும் பெயர்களும் கையில் உலக்கை ஏந்திய பலராமனையே குறிக்கும். உலக்கையன் எனப் பொருள் தரும் 'முசலி' எனும் வடமொழிப் வடமொழிப் புராணமரபிலும், பலராமனுக்கு வழங்கக் காணலாம். இவை மறைந்துபோன பலராம வழிபாட்டின் எச்சங் களாகும். பெயர் 1. குறிப்புகள் மு. இராகவையங்கார். ஆராய்ச்சித்தொகுதி, 2ஆம் பதிப்பு, 1964, u. 54. 2. Shakti M. Gupta, From Daityas to Devatas in Hindu Mythology, 1973, p.12. 3. அக்னிகோத்ரம் ராமானுஜ 4. தாத்தாச்சாரியார், வரலாற்றில் பிறந்த வைணவம், 1973, ப. 137. K. R. Srinivasan, Some aspects of Religion as revealed by Early Monuments and Literature, The Madras University Journal, 1960. p. 147.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/278&oldid=1468155" இலிருந்து மீள்விக்கப்பட்டது