பக்கம்:அழகர் கோயில்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

270 அழகர்கோயில் பரிபாடலைப் பற்றி பொ. வே. சோமசுந்தரனார் தருகின்ற ஒரு சுருத்து இங்கே நினையத்தகும். "மதுரையையும், அதன் அணித்தாகிய திருப்பதியையும் யாற்றையுமே இப்பரிபாடல் கூறு வனவாக, எஞ்சிய இரு முடிவேந்தர் நாட்டிலுள்ள திருப்பதிகளும், யாறுகளும்,இப்பரிபாடல் பெறாமைக்குக் காரணம் யாது? இனி, எழுபது என்று தொகை கூறப்பட்ட பாடலனைத்தம் பாண்டிய நாட்டிற்கே உரியன என்றே ஊகிக்சு இடனுளது.' "23 "பதிற்றுப்பத்து சேரர்களைப் பற்றியே கூறுவதுபோலப் பரிபாடல் பாண்டியர்களைப் பற்றியே கூறுகின்றது..... எனவே இப்பாடல்கள் பாண்டிய நாட்டி லேயே வழங்கியிருக்கலாம் என்ப" என்கிறார் இரா.சாரங்கபாணி 24 இக்கருத்தே ஏற்புடையது எனத் தோன்றுகிறது. இந்நூலின் திரு மாலைப் பாடும் ஆறு பாடல்களும் பலராமனைக் குறிப்பதும், இந் திரனோடு பாண்டியன் கொண்ட பகைமையும், சோழநாட்டில் இந்திரவிழா நடப்பதும் இக்கருத்தை உறுதிசெய்கின்றன. மழைமேகம் போன்ற நிறமுடையவன் கிருஷ்ணன் (கண்ணன்} அவன் காக்கும் முல்லைநில உயிரினங்கட்கும் புல்வளர மழை வேண்டும். கிருஷ்ணனின் மற்றொரு அவதாரமான பலராமன் கலப்பையேந்தி அருள் செய்யும் உழவர்களுக்கும் மழை வேண்டும். எனவே உழவர்க்கும், கால்நடை வளர்ப்போர்க்கும் கண்ணன் மழை தருகிறான். "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலை பற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்பெரும் பசுக்கள் 26 கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆண்டாளின் திருப்பாவையில் பேசப்படும் கருத்து இது. பலராம வழிபாட்டின் தோற்றம், இந்திர வழிபாட்டின் சரிவு. மழைத்தெய்வ வழிபாடு வீரவழிபாட்டிலும் கலந்தது, பலராமன் திருமாலின் மற்றொரு அவதாரம் என்ற கொள்கை- இவை அனைத்தும் சேர்ந்த விளைவாக இப்பாடற் கருத்து உருப்பெறுகிறது. கால்நடை வளர்ப்போரைப் போல, உழுதொழில் செய்டோ ரையும் இருக்க வைணவமதம் பலராம வழிபாட்டைப் பயன்படுத்தியது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/277&oldid=1468154" இலிருந்து மீள்விக்கப்பட்டது