பக்கம்:அழகர் கோயில்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கல்வெட்டுக் குறிப்புகள் 273 ராமன் திருமதில்' கட்டியமைக்காசு, சுந்தரபாண்டிய வளநாட்டுப் பெருங்கருணைச் சதுர்வேதிமங்கலத்தைத் திருப்பணிப்புறமாகப் பெற்ற செய்தியைக் கூறுகிறது. 12 இவ்வூர் தற்போது முதுகுளத்தூ" வட்டத்திலுள்ள பெருங்கருணை என்ற ஊராக இருக்கலாம். சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு முன்னுள்ள மண்டபச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டு, மலைமீதிருந்த திருவாழி ஆழ்வார் (சக்கரத்தாழ் வார்) கோயிலுக்குத் திருவிளக்கெரிப்பதற்குத் தரப்பட்ட நிவந்தங் களைக் குறிப்பிடுகிறது. 13 இப்போது மலைமீது நிருவாழி ஆழ் எனவே, மலை வாருக்குக் கோயில் எதும் காணப்படவில்லை. மீதிருந்த கோயில் பிற்காலத்தில் எக்காரணத்தாலோ கோயிலுக்குள் இக்கல்வெட்டு இருக்குமிடத்திற்கருகில் கொண்டுவரப்பட்டு திரு நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சகம் 1386 (கி.பி. 1464) இல் எழுந்த ஒரு கல்வெட்டு, திரு மாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன் உறங்காவில்லி தாசன் ஆணையின்படி இக்கோயிலில் உபானம் (அடித்தளம்) முதல் ஸ்தூபி வரை திருப்பணி செய்த திருவானன் சோமயாஜிக்கு, குல மங்கலம் என்னும் சிற்றூர் தானம் செய்யப்பட்டதைக் கூறுகிறது.' சடாவர்மன் முதலாம் குலசேகரன் காலத்துக் கல்வெட்டொன்று. இக்கோயிலில் இளையவில்லிதாசர் என்பவர் செய்த திருப்பணிக்காக அரிநாட்டுப் பராந்தகச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் தேவதா னமாகத் தந்த புனற்குளம் என்ற ஊரை இறையிலியாக்கிய அரச ஆணையினைக் கூறுகிறது.18 சுந்தரபாண்டியன் மண்டபத்தில் ஒரு தூணிலுள்ள கல்வெட்டு, அத்தூணைத் திருமாலிருஞ்சோலையில் வசித்த வெள்ளாளன் சுந்தர பாண்டிய விழுப்பரையனான குட்டன் அத்தியூர் நிறுவியதாகக் குறிப்பிடுகிறது. இம்மண்டபத்தில் இன்னொரு தூணிலும் இதைப் போன்றதொரு கல்வெட்டு உள்ளது. 18 இம்மண்டபத்திலுள்ள மற்று மொரு தூணில் அத்தூணை வண்குருகூர் நாகரன்பட்டன் என்பவன் நிறுவிய செய்தி கூறப்படுகிறது.17 பதினெட்டாம்படிக் கோபுரத் தின்கீழ் உள்ள ஒரு கற்றூணில் அத்தூணைத் திருமலைதேவ மகாரா ஜாவின் கொடையாக இளையனாயனானான திருப்பணிப்பிள்ளை என்பான் அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/282&oldid=1468160" இலிருந்து மீள்விக்கப்பட்டது