பக்கம்:அழகர் கோயில்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

274 அழகர்கோயில் வெட்டுகள் கூறுகின்றன. சகம் 1464 (கி.பி. 1542) இல் எழுந்த விசயநகர மன்னர் காலத்திய ஒரு கல்வெட்டில் கோயில் இறைவன் 'அழகர்' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். ஆயினும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில், 'அழகர் திருச்சிறுக்கர்’6, 'அழகர் சிறுக்கர் ஆகிய பெயர்கள் இக்கோயிற் பணியாளரில் ஒருவரைக் குறிப்பதால், பிற்காலப் பாண்டியர் காலத்திலேயே, 'அழகர்' என்ற பெயர் இறைவனுக்கு வழங்கியிருக்க வேண்டுமெனத் தெரிகிறது. 4. கட்டிடத் திருப்பணிகள்: யனான மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புள்ளூர்க்குடி முனையதரை பொன்பற்றியுடையான் மொன்னைப்பிரான் விரதமுடித்த பெருமாள்' என்பவன் முனையதரையன் திருமண்டபத்தைக் கட்டிய செய்தியை ஒரு கல்வெட்டால் அறிகிறோம் 8 இக்கோயில் மகா மண்டபமான இதற்கு, 'அலங்காரன் மண்டபம்' என்றொரு பெயரு முண்டு இம்மண்டபத்தை அடுத்த வெளிப்புறமாக உள்ள மண்டபம் ஆரியன் மண்டபம்' என வழங்கப்படுகிறது. இம்மண்டபத் தூணி லுள்ள ஒரு கல்வெட்டால் இப்படியேற்ற மண்டபத்தைத் தோமரா சய்யன் மகளான ராகிவராஜா என்பவன் கட்டிய செய்தி தெரிய வருகிறது.' இரண்டாம் திருச்சுற்றிலிருந்து பத்துப் படிகள் ஏறி இயமண்டபத்தை அடையவேண்டும். எனவே இதற்குப் படியேற்ற மண்டபம் என்ற பெயர் வழங்கிற்றுப் போலும். கொடிக்கப்பத்திற்கு வடகிழக்கிலுள்ள மேட்டுக் கிருஷ்ணன் கோயிற் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டால், இதற்குப் 'பொன்மேய்ந்த பெருமாள் மண்டயம்' என்பது பெயரென்றும் சுந்தரபாண்டியன் இதனைக் கட்டினானென்றும் தெரிகிறது.16 தொண்டைமான் கோபுரத்துக்கீழ் ஒரு தூணில் காணப்படும் கல்வெட்டால் இக்கோபுரத்தைச் செழுவத்தூர் காலிங்கராயர் மகாைன தொண்டைமானார் செய்தமைத்தார் என்பதை அறிய முடிகிறது. 11 தொண்டைமான் கோபுரத்தின் கீழுள்ள கவரில் காணப்படும் ஒரு கல்வெட்டு இக்கோயில் ஏாங்)கி ஸ்ரீவைஷ்ணவரான அழகள் திருச்சிறுக்கர், இக்கோயிலில் அரசன் பெயர் சூட்டப்பட்ட 'கோதண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/281&oldid=1468159" இலிருந்து மீள்விக்கப்பட்டது