பக்கம்:அழகர் கோயில்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை !I : 4 வலையன் கதை வர்ணிப்பு மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவு ரையாளர் திரு செல்வின்குமாரால் 1977 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பல்கலைக்கழகத்தை அடுத்துள்ள வடபழஞ்சி கிராமத்தில் 'வலையன் கதை வர்ணிப்பு' என்னும் இப்பாடல் பதிவு செய்யப்பட்டு ஆய் வாளருக்கு உதவப்பட்டது. பாடியவர் வலையர் சாதியைச் சேர்ந்த வி எம்.சுப்பையா என்பவர். செவிவழிச் செய்திகளின்படி இவ் வர்ணிப்புப் பாடலை எழுதிய பொன்னுசாமி வித்துவான் மதுரை யையடுத்த பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்ப நாயக்கரின் மகனாவார் என்று தெரிகிறது. ஆதிநாராயண அழகமலைத் தாதா உன்னை அந்தியிலும் சந்தியிலும் அறுபது நாழிகையும் அனுதினமும் நான் தொழுவேன் தேவரிசி ஓர்முனிவர் அரசர் மானிடர் தினம்தினம் வந்தேபணிந்து சாபம் தனையகற்றும் மகுமையுள்ள தீர்த்தம் பாரினிலே இது பகராய் நென்மதுரை மாதகரில் பொற்றாமரையாம் தெப்பக் குளத்தருகில் எந்நாளும் வீற்றிருக்கும் சித்திநாயகனை எப்பொழுதும் போற்றி செய்தேன் சேத்திர பாலகர்களும் தொல்லுலக மந்திரியாம் படிவாசல் முத்தையா துடியா யதில் அல்லுபகல்....... 10 ராசனும் இணையாய்ச் இருக்க ...யிருக்கும் காலமதில் ததிபுகழ் அழகமலையில் தென்மூலைச்சாரி நடமாய் வருகையிலே பதிமுழுதும் நாலைந்து கண்மாரி பெய்து பாரெங்கும் தான்கூடி இருக்குகின்ற காலமதில் வலையனொருவன் எளியோர்க்கும் எளியவனாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/306&oldid=1468184" இலிருந்து மீள்விக்கப்பட்டது