பக்கம்:அழகர் கோயில்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கருப்பன் பிறப்பு வளர்ப்பு வர் சிப்பு 317 75 ஆணலையும் பெண்ணலையும் அலைமோதி வருநேரம் பொல்லாத வேளை கருப்பையா உன் பொட்டியைத் தள்ளினான் தள்ளிவிட்ட பொட்டி தங்கஇடம் இல்லாமல் தானே அதுமிதந்து வருகுதுபார் வைகையிலே குன்னூருப் பாலமாம் குடவரையுந் தான்கடந்து தண்ணியிலே 80 அண்ணஞ்சி தேவாரம் கருப்பன்பொட்டி அடுத்ததா மன்னேரம் கூடலூர் கம்பமாம் கருப்பன்பொட்டி குதித்து விளையாண்டுவர வீரபாண்டி ஆறு மலையாளன்பொட்டி வெகுவேகமாய் நடக்க பெரிய குளமாம் பேர்போன நதியாம் கருப்பன்பொட்டி பிரிந்து தேனி அணியாம்பொட்டி சீறிக் கடத்துவர மிதந்துவ 85 சின்னமனூரும் சித்தாத்துப் பண்ணைவிட்டு சித்தணையாம் பேரணை அணையும் கடந்து கருப்பன்பொட்டி அடுத்து மிதந்துவர தேவதானப்பட்டி காமுதலை வாசல்விட்டு கருப்பன்பொட்டி கடந்து வெளியேறி போய்வாரே னென்று சொல்லி இருபத்தியோர் பேரிருக்கும் பொட்டி ஏகி வழிநடக்க சின்னவிளாம்பட்டி பெரியவிளாம்பட்டி பட்டிவழிபொட்டி பாங் காகவே வருக 90 பறையமகன் தூக்கி எடுத்துப்பார்த்து பாங்காகப் பழயபடி தள்ளிவிட தள்ளிவிட்ட பொட்டி தங்க இடமில்லாமல் குருவித்துறையாம் வல்ல கங்கைப்பெருமாள் தலைவாசல் பொட்டி வாகாகவே கடக்க மன்னாடிமங்கலமாம் மலையாளன் கருப்பன்பொட்டி ஏகி வழியொதுங்க இரும்பாடிப் பாலமாம் கருப்பட்டியைக் கடந்து கருப்பன்பொட்டி கடந்ததாம் வைகையிலே 95 பண்ணிமுட்டியோடு பழய மடைக்கேணி பாங்கா யதுகடக்க தென்கரைப்பாறை அகிலாண்டேஸ்வரி கோயில்விட்டு ஆன ஆத்து வடபாலாம் அடந்த கரைமேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/324&oldid=1468201" இலிருந்து மீள்விக்கப்பட்டது