பக்கம்:அழகர் கோயில்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராக்காயி வர்ணிப்பு 329 155 கொய்யாப் பழம்பறித்து கோம்பை மலைமேலே குழந்தைபசி தீர்த்தாளாம் அப்பேச எலுமிச்சம் பழம்பறித்து ஏழுமலை கடந்து இருந்துபசி தீர்த் தாளாம் கோவைக் கனிபறித்து குழந்தைகளோட கூடி வழிநடந்தாள் அப்போ பேரீச்சம் பழம்பறித்து பெருமாள் மலையிலே ராக்காயி பிள்ளப் u தீர்த்தாளாம் பழம்பிறக்கிப் பசியமத்தி வாழப்பழம் பறிக்க வடமலையைச் சுத்திவந்தாள் 160 கொடிமுந்திரி பறித்து குழந்தை பசியமத்தி மாங்கனியும் தேங்கனியும் வாழை பலாக் கனியும் மக்களுக்கே பறித்து மதலைபசி தீர்த்தாளாம் பழமுதிர் சோலைவிட்டு பாலர்களே வாங்க உங்கமாமன் கருப்பனுடைய படியழகப் பார்ப்போமென்று 165 பத்தினியாள் ராக்கு பக்குவமாய்த் தானழைத்தாள் அந்த மாதாள் அரசி ராக்காயி மக்களைக் கூட்டி மைக்காரி வரும் பாதையிலே மயிலுவந்து பாக்குது மலையாளி யிருக்கும் மணிக்கதவப் பார்வை யிட மைக்காரி போறாளென்று கரடிவந்து பாக்குதாம் கருப்பனுடைய கதவழகத் தேடி ராக்கு கட்டழகி போறாளென்று சிட்டுவந்து பாக்குதாம் செங்கமலை விட்டு அண்ணன் கருப்பனுட 170 சீரழகக் காண்பதற்கு செல்வி போறாளென்று கதவு அன்னம்வந்து பார்வையிட அண்ணன் கதவழகப் பார்ப்பதற்கு அருங்கிளியாள் போறாளென்று பறவைகளும் சிட்டுகளும் பஞ்சவர்ணக் கிளிகளெல்லாம் பத்தினியப் பாத்து பட்சியெல்லாம் வழியனுப்ப நடந்தாள் ராக்காயி நடுமலையத் தான்கடந்து 175 பாலர்களைக் கூட்டி போய்வாரே னென்றுசொல்லி பத்தினியான் ராக்காயி பாரவழி நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/336&oldid=1468216" இலிருந்து மீள்விக்கப்பட்டது