பக்கம்:அழகர் கோயில்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை IV ! 1 வேடமிட்டு வழிபடும் அடியவர்கள் வினாப்பட்டிக்கு விடையளித்தோர் பட்டியல் முன்னுரைச் 1979ஆம் ஆண்டு மே மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களில் அழகர்கோயில், மதுரை தல்லாகுளம், வைகையாற்றுப் படுகை ஆகிய பகுதிகளில் சித்திரைத்திருவிழாக் கூட்டத்தில் களஆய்வு நிகழ்த்தப்பட்டது. பட்டதாரிகளான ஐந்து உதவியாளர்கள் ஆய்வாளர்க்குத் துணைசெய்தனர். அழகர்கோயிலில் 9ஆம் தேதி இரவிலும், தல்லாகுளத்தில் 10 ஆம் தேதி மாலையிலும் இரவிலும். வைகையாற்றுப் படுகையில் 11 ஆம் தேதி முற்பகலிலும் வேடமிட்டு வழிபடும் அடியலர்கள் நூறு பேரிடம் வினாக்கள் கேட்கப்பட்டன. விடைகள் ஆய்வாளராலும், உதவியாளர்களாலும் எழுதப்பட்டன. மேற்குறித்த நேரங்களில் மேற்குறித்த இடங்களில் அடியவர்கள் பெருங்கூட்ட மாகத் திரண்டிருப்பதால் நேரமும் இடம் அதை யொட்டித் தேர்வு செய்யப்பட்டன. இவ்வாண்டு (1979) மதுரை நகரத் திராவிடர் கழகத்தினர் “விபசாரத் தடைச்சட்டத்தின் கீழ் கள்ளழகரைக் கைது செய்’ என நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். ஆற்றிலிறங்கிய அழகர் வண்டியூருக்குத் தன் காதலி துலுக்கநாய்ச்சியார் வீட்டிற்குச் சென்று இரவு தங்குகிறார் என்று மக்கள் கூறும் கதையீனை இவ்வாறு கேலி செய்திருந்தனர். திருவிழாவில் கலந்துகொள் வந்திருந்த நாட்டுப்புற மக்களுக்கு இச்சுவரொட்டிகள் கோபத்தை ஊட்டியிருந்தன. எனவே வினாப்பட்டியோடு தங்களை அணுகிய ஆய்வாளரையும் உதவியாளர்களையும் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள் 'திராவிடர் கழகத்தினர்' எனச் சந்தேகப்பட்டனர். பெரும்பாலோர் விடையளிக்க மறுத்துவித்துவிட்டனர். உதவியாளர் களில் ஒருவரைத் திட்டி அனுப்பிவிட்டனர். எனவே ஒவ்வொரு எழுதி வரிடமும் நிலைமையை விளக்கி, விடை கூறவைத்து முடிக்கப் பதினைந்து நிமிடங்களாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/390&oldid=1468274" இலிருந்து மீள்விக்கப்பட்டது