பக்கம்:அழகர் கோயில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 35 இக்கோயிலுக்குக் கிழக்கே ஒருமைல் தொலைவிலுள்ள குகையில் காணப்பெறும் தமிழி (பிராமி) எழுத்துக் கல்வெட்டுக்களால் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இம்மலைப்பகுதியில் சமணத்துறவிகள் வாழ்ந்த செய்தியை அறியலாம். எனவே சமய எதிர்ப்புப் போரில் அவர்கள் வாழ்ந்த விடைமலையின் பெயரினையும் திருவிளையாடற் புராணம் குறிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்தியே. விடையினை (எருதினை)த் தருமத்தின் அடையாளமாகக் கருதுவது சைவ, வைணவர்களைப் போலவே சமணர்க்கும் மரபாகும்28 இம்மலைப் பகுதியில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளில் காலத்தால் முந்தியது, சமணத்துறவியரின் இருக்கை பற்றியதாகும். எனவே 'விடைமலை' என்ற பெயர் சமணராலேயே இம்மலைக்கு இடப் பட்டிருக்கலாம். சமணர்களாலே இடப்பட்ட பெயர் என்பதாலேயே, இப்பெயர் இத்தலம் குறிந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் குறிக்கப் பெறாது போயிருக்கலாம் எனத் தோன்றுகிறது. 3.4. இறைவனின் பெயர் : இங்குக் கோயில்கொண்ட இறைவனின் பெயரைப் பரிபாடலும் சிலம்பும் குறிக்கவில்லை. அழகன், அலங்காரன், திருமாலிருஞ்சோலை நின்றான், சுந்தரத்தோளுடையான், ஏறுதிருவுடையான், நலத்திகழ் நாரணன் ஆகிய பாசுரத் தொடர்களே*9 பெயர் வழக்குகளாக நிலைபெற்றுவிட்டன. ஆழ்வார்கள் காலத்துக்குப் பிற்பட்ட சிற்றிலக் கியங்களிலும் இப்பெயர்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. 'சுந்தரத்தோளுடையான்' எனும் பெயர் இக்காலத்தே 'சுந்தர ராஜன்' என வழங்கப்படுகிறது. அழகன், அலங்காரன் ஆகிய இ பெயர்களும் சிற்றிலக்கியங்களில் பெருமளவில் வழங்கப்படுகின்றன. அழகரந்தாதி இருபத்து மூன்று இடங்களில் அழகன் என்ற பெயரையும். இருபத்தைந்து இடங்களில் அலங்காரன் என்ற பெயரையும் வழங்கு கிறது.30 அழகர் கலம்பகம் நாற்பத்திரண்டு இடங்களில் அழகன் என்ற பெயரையும், பதினைந்து இடங்களில் அலங்காரன் என்ற பெயரையும் வழங்குகிறது. 31 குறவஞ்சிகள் இரண்டிலும், 'அழகன்' என்னும் பொருள் தரும் 'சுந்தரள்' என்ற பெயர் மிகுதியும் குறிக் கப்படுகிறது. சோலைமலைக் குறவஞ்சி, அறுபத்துநான்கு ஆசிரிய அடிகளையுடைய ஒரு பாடலில் 'சுந்தரன்' என்ற பெயரை முப்பது முறை வழங்குகிறது. 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/42&oldid=1467900" இலிருந்து மீள்விக்கப்பட்டது