பக்கம்:அழகர் கோயில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42. அழகர்கோயில் பாடியநாகும். செங்கம் நடுகற்களில் ஒன்று பல்லவமன்னன் சிம்மவிஷ்ணுவை, 'கோவிசைய சிங்க விண்ணபருமற்கு எனக் குறிப்பதால், 'விண்ணந்தாயன்' என்ற இப்பார்ப்பனனின் பெயரும் 'விஷ்ணுதாயன்' என்பதன் தமிழ் வடிவம் என்று உணரமுடிகிறது. எனவே கவுன்டினிய கோத்திரத்தைச் சேர்ந்த இப்பார்ப்பனன் வைணவத்தைத் தழுவியவன் என்பது தெளிவாகும். இவனைப் புகழும் புலவர் ஆவூர் மூலங்கிழார்', “ஆறுணர்ந்த ஒருமுதுநூல் இகல்கண்டோர் மிகல் சாய்மார் '62 இவன் பல வேள்விளைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றார். இவ்வடி களுக்கு. “ஆறங்கத்தானும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய, புத்தர். முதலாயின புறச் சமயத்தோரது மிகுதியைச் சாய்க்கவேண்டி" என்று புறநானூற்றின் பழைய உரைகாரர் பொருள் கூறியிருப்பதும் 2 இங்கு உணரத்தகுந்தது. தமிழ்நாட்டில் புறச்சமயங்கள்-செல்வாக்குப் பெற்றிருந்த நிலையினையும் இப்பாடலாலும் உரையாலும் அறிகிறோம். புறமத எதிர்ப்பில், தமிழ்நாட்டு வைணவத்திற்கு இப்படி யொரு வரலாற்றுப் பின்னணி, உண்டு. இச்செய்தியை மனத்தில் நிறுத்திப் பாசுரங்களின் உரைகளை உற்று நோக்கவேண்டும். 'தண்ணா அசுரர் நலியவே' என்ற அடிக்கு நம்பிள்ளை ஈடு தரும் உரை விளக்கம் இது: நெடும்பகை தற்செய்யத் தானேகெடும் என்னுமாறு போல இவன் இவ்விடத்தினை விடாதே வசிக்க அசுரக்கூட்டம் முடிந்து போயிற்று” திருமாலிருஞ்சோலைப் பகுதியிலே அசுரக்கூட்டம் இருந்த செய்தியை இவ்வுரைப்பகுதி விளக்குகிறது. '"அடுத்தாற்போல, அசுரர்கள் யார் என்பதையும் உரைப்பகுதி தெளிவாக்குகிறது. “உலகத்தில் தெய்வப்பிறவி என்றும் அசுரப்பிறவி என்றும் உயிர்களின் படைப்பு இரண்டு விதம்; விஷ்ணு பக்தியோடு' கூடியது தெய்வப்பிறவி; விஷ்ணுபக்தி இல்லாதது அசுரப்பிறவி என்னக்க்ட்வதன்றோ? உரையாசிரியர் கருத்துப்படி ‘விஷ்ணுபக்தி' இல்லாத புறமதத்தினர் அசுரர்களாகக் கருதப்படுவர். அவுள்கள் இம்மலைப்பகுதியிலே இருந்தமையால் இவ்விடம் 'ம்லேச்சபூமி' யாயிற்றுப் போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/49&oldid=1467907" இலிருந்து மீள்விக்கப்பட்டது