பக்கம்:அழகர் கோயில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் டங் இம்மலைப்பகுதியில் விஷ்ணுபக்தி இல்லாத அசுரர்களான புறமதத்தவர் யார் இருந்தனர் என்பதனைத் திருமங்கையாழ்வாரின் திருமாலிருஞ்சோலைத் திருமொழி விளக்குகிறது. **சமணரும் பௌத்தரும் பழிப்பன பேசிடினும், இம்மலையில் திருமால் கொண்டான்' என்பது அவர் பாடல் தரும் செய்தியாகும்.6% எனவே நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறும். 'நண்ணா அசுரரும் சமண' பௌத்தராகவே இருத்தல் கூடும். நங்கள் குன்றத்தைக் கைவிடச் செய்ய முயன்றனரும் அவர்களாகவே இருக்க வேண்டும். உரையா சிரியர் கருத்துப்படி 'அந்த', அசுரக்கூட்டம் முடிந்துபோமளவும் திருமால் இத்தலத்தை விடாதே வசித்தான். இக்கருத்தினை மனத்தில் கொண்டு இத்தலம் குறித்த திருமங்கையாழ்வாரின் -பாசுரங்களைக் கூர்ந்து நோக்கினால் *கோயில் கொண்ட இடம் எம் இடம்' என்ற உரிமையுணர்வு அப்பாசுரங்! களில் தவறாது ஒலிக்கக் காணலாம். “எம் அடிகள் தம் கோயில்' அரவணைத்துயின்ற www... அடிகள் கோயில்'

  • அகலிடமுழுது மளந்த எம்அடிகள்தம் கோயில்’ 'அமர்செய்த அடிகள் தம் கோயில்'

'கூத்தஎம் அடிகள்தம் கோயில்' 'கடல்வணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்' *மழைமுகில் வண்ணர்தம் கோயில்*87 இதே உணர்வும் இதே கருத்தும் நம்மாழ்வாரின் திருமாலிருஞ் சோலைத் திருவாய்மொழியிலும் நிறைந்திருக்கக் காணலாம். 'வனரொளி மாயோன் மருவிய கோயில்' அதிங்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்' 'புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்' 'அறமுயல் ஆழிப்படையவன் கோயில் 'பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்' 'உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்' 'நிலமூலம் இடத்தான் நீடுறை கோயில்' மாயன் கோயில்' 'அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில் 'வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில் '68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/50&oldid=1467908" இலிருந்து மீள்விக்கப்பட்டது