பக்கம்:அழகர் கோயில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4.0. 4. ஆண்டாரும் சமயத்தாரும் அழகர்கோயில் பரம்பரப் பணியாளர்களின் னான்கு பணிப்பிரிவுகளில் ஆண்டார்' என்பதும் ஒன்றாகும். இப் பணிப்பிரிவில் திருமாலை ஆண்டார், திருமலை தந்தான் நோழப்பன் என்ற இரண்டு நிருவாகங்களும் அடங்கும். இத்தலத்தில் 'ஆசார்ய' மரியாதைக்குரியவர்கள் இப்பணிப்பிரிவினரேயாவர். சாதியாற் பிராமணராவர். 4.1. 'ஆண்டார்' -- சொற்பொருள் : இவர்கள் •ஆண்டார்' எனுஞ் சொல் தமிழகக் கோயிற் கல்வெட்டுகளில் கோயிலுக்குப் பூ இடுவார். தழையிடுவார் ஆகியோரையே குறிக் கிறது. ஆயினும் இக்கோயிலில் 'ஆண்டார்' பணிப்பிரினர் இப் பணிகளைச் செய்வதில்லை. மாறாகப் 'பண்டாரி' என்னும் பிரா மணரல்லாத பணிப்பிரிவினர் இக்கோயிலில் இறைவனுக்கு மாயை கட்டிந்தரும் பணியினைச் செய்துவருகின்றனர். இக்கோயிலில் ஆண்டார் பணிப்பிரிவினரின் தோற்றம் ஆய்வுக்குரிய ஒன்றாகும். 4.2. திருமாலை ஆண்டான்' - பெயர்க்காரணக் கதையும் மறுப்பும்: இப்பணிப்பிரிவிளரின் முன்னோரான திருமாலை ஆண்டா னுக்கு அப்பெயர் ஏற்பட்டது குறித்து ஒரு கதை வழக்கில் இருந்துவருகிறது. கோயிலில் "திருமாலை ஆண்டான் இராமானுசருக்குத் திருவாய்மொழிப் பாடஞ் சொல்லிவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புவார். ஒருநாள், இருளில் முன்னால் தீப்பந்தம் பிடிந்து வழி காட்டிச் செல்லும் சிறுவன் தூங்கிவிட்டான். இதையறிந்த திரு மாலாகிய இறைவனே அச்சிறுவன் வேடத்தில் வந்து ஆண்டானுக்கு முன்னாகத் தீப்பந்தம் பிடித்து வழிகாட்டிச் சென்றான். மறு நாள்தான் திருமாலை ஆண்டான், முதல்நான் இரவில் தீப்பந்தம் பிடித்து வழிகாட்டி வந்தவன் இறைவனே என்பதைத் தெரித்து கொண்டார். இறைவன் கருணையை எண்ணி வியத்தார். இவ்வாறு 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/60&oldid=1467918" இலிருந்து மீள்விக்கப்பட்டது