பக்கம்:அழகர் கோயில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்டாரும் சமயந்தாரும் 57 இவரது மகன் சுந்தரத்தோளுடையார் வைணவத்தின் எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஓருவராக அழகர்கோயிலில் இராமானுசரால் நியமிக்கப்பட்டார்.19 எனவே இராமானுசர் காலம் தொடங்கி, திருமாலை ஆண்டான் பரம்பரையினர் அழகர்கோயி லோடு உறவுபூண்டு இருபத்துநான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இக்கோயிலில் பணிபுரிந்த செய்தியினை அறியமுடிகிறது. 44. தோழப்பச்’-நிருவாகப் பழமை : திருமலை தந்தான் தோழப்பன் என்ற நிருவாகம் எக்காலத் நிலோ இடையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்நிருவாகத்தாரின் முன்னோர் ஒருவர் ஒரு படையெடுப்புக் காலத்தில் இறைவன் திருமேனியை ஒரு குழிக்குள் மறைத்து வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண் சரிந்து விழுந்து உயிர்நீத்த தியாகத்தால் 'ஆண்டார்' பணியில் அவர் வழியினர்க்குப் பங்கு தரப்பட்டது என இப்போது இந்நிருவாகப் பணியிலுள்ளவர் கூறுகிறார்.14 அழகர் கிள்ளைவிடு தூது, வையங்கார் வண்ணனையே வந்துதொழும் தோழப் பையங்கார் என்னும் ஆசாரியரும்'15 எனக் குறிப்பதால் அந்நூல் பிறந்த காலத்தில் இந்நிருவாகம் இருந்த செய்நியை அறியமுடிகிறது. அழகர் பிள்ளைத்தமிழ் நூலாசிரியரும், "தோழப்பர் நற்றமிழ்ச் சீர்பதிப்போன்" எனத் தன் ஆசாரியரைக் குறிப்பிடுகிறார். இந்நூலின் பதிப்பாசிரியர் திருநாராயணையங்காள், அழகர்கோயிலில் தோழப்பர் நிருவாகம் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றியது (1929இல்) என எழுதுகிறார். ? எனவே இக்குறிப்புக்களினால் கி. பி. 18 ஆம் நூற்றாண்டில் அல்லது அக்காலத்திற்குச் சற்று முன்னர் இந்நிருவாகம் பிறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 16 இந்நிருவாகப் பழமையினையறியப் பரம்பரைத் தனியன்கள், வாழித் திருநாமங்கள் முதலிய பிற சான்றுகள் கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/64&oldid=1467922" இலிருந்து மீள்விக்கப்பட்டது