பக்கம்:அழகர் கோயில்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 அழகர்கோயில் இல்லை. ஆனால் சிவகங்கைக்கருகில் கூட்டுறவுபட்டியில் ஒருவரும், முதுகுளத்தூருக்கு வடக்கே சாம்பக்குளத்தில் ஒருவரும், அருப்புக்கோட் டைக்கருகே கானூரில் ஒருவரும், கட்டனூரில் ஒருவரும் ஆக, அதிகமாக வண்டி கட்டிக்கொண்டு வரும் அடியவர்கள் வாழும் பகுதியில் நான்கு சமயத்தார்கள் உள்ளனர். எனவே அட்சளின் கணிப்பு ஏற்புடையதாக இல்லை. 4.10. சமயத்தார் எண்ணிக்கை : ஆண்டார் பணிப்பிரிவின் இரண்டு நிருவாகத்தாரும் தங்களுக்குப் பதினெட்டுச் சமயத்தார்கள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆயினும் திருப்புவனம், கானூர், கட்டனூர், சாம்பக்குளம், கலியாந்தூர், சுந்தரராஜன்பட்டி, எட்டிமங்கலம், கூட்டறவுபட்டி, மணலூள், காரைசேரி, மேலமடை, கப்பலூர், முடுவார்பட்டி, பிள்ளையார் பாளையம் ஆகிய பதினான்கு சமயத்தார் பெயரையே அவர்களால் தரமுடிந்தது. இவர்களில் கலியாத்தூரார் திருப்புவனம் சமயத் தாருக்கு உதவி செய்யும் கொண்டித்தாதர் ஆவார். ஏனையோரைப் போலச் சமயத்தாராகக் கருதப்படுவதில்லை. வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல் ஓலையும் பாண்டிச்சமையம் பதுநெ (Sic) ட்டுக்கும் '25 என்று ஆண்டாருக்குப் பதினெட்டுச் சமயத்தார் இருந்த செய்தியை உடன்படுகிறது. ஆயினும் பட்டய நகல் ஓலையில் ஆறு பேர்களே குறிப்பிடப்பட்டுள்ளனர். நகல்ஓலை குறிப்பிடும் பெரிய கோட்டை இருளன்தாதன், கொண்டையன் சென்னாதாதன், பளையனூர் ரெங்கன்தாதன் ஆகிய பெயர்கள் ஆண்டார் பணிப் பிரிவினர் தந்த பட்டியலில் இல்லை. நகல்ஓலை குறிப்பிடும் வெள் ளலூர் வெள்ளைநாயுள் அம்பலக்காரர் சமயத்தாரா அல்லரா என்பது விளங்கவில்லை. எனவே ஒரு சமயத்தாரின் பணி எக்காரணத்தாலோ நின்று போனால் புதிய ஒருவரை ஆண்டார் நியமித்துக்கொள்வாரென்று தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக, 1976 வரை பட்டத்திலிருந்த ஆண்டார் நிருவாகத்தாரான கிருஷ்ணமாசாரியர் பல்லக்கின் முன் கொம்பில் சிறிய மணி ஒன்றினைக் கட்டுவதற்கு, 'மணிகட்டிச்சமயம்' என்ற ஒன்றையும், சீகுபட்டி பட்டத்தரசி' என்றொரு சமயத் தினையும் உண்டாக்கினாரென்று ஆண்டார் பணியின் மற்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/67&oldid=1467926" இலிருந்து மீள்விக்கப்பட்டது