பக்கம்:அழகர் கோயில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆண்டாரும் சமயந்தாரும் 61 நிருவாகத்தாரான தோழப்பர் அழகரையங்கார் கூறுகிறார் 6 எனவே சமயந்தார் நியமனம் ஆண்டாரின் விருப்பங்களுக்கு ஏற்ப அமையும் என்று தெரிகிறது. 4.11. ஆண்டாரின் சமய அரசாங்கம் : ஆண்டாரின் சமயத்தலைமை அடியார்களிடத்தில் ஓர் அரசாங்கமாக உருவகிக்கப்பட்டுள்ளது. அர திருப்புவனம் சமயத்தார் (தாயுடு) ஆண்டாரின் சமய சாங்கத்தின் மந்திரியாவார். கப்பலூர்ச் சமயத்தார் (பறையர்) சித்திரைத் திருவிழாவில், ஆண்டாரின் பல்லக்கிற்கு முன்னால் வெள்ளைக் கொடிபிடித்து வருவார். எட்டிமங்கலம் சக்கன்நாதன், சுந்தரராஜன்பட்டி பொக்கன்தாதன் (பள்ளர்) ஆகிய இரு சமயத் தாகும் ஆண்டாரின் அரசவைக் கோமாளிகள் ஆவர். இவர்கள் தலையில் கோமாளிக்குல்லாய் அணிந்து, சோளிமுத்துப் பல்வரிசை கட்டி ஆண்டாருடன் வருவர். காரைச்சேரிச் சமயத்தார் (பள்ளர்) வண்டியூரில் ஆண்டார் தங்குவதற்குக் கொட்டகை அமைத்துத் தருவார். மேலமடைச் சமயந்தார் (கோனார்) வண்டியூரில் ஆண்டார் தங்கும்போது ஒருபாளைத் தயிர் கொண்டுவந்து தருவார். கலியாந்தூர்ச் சமயத்தார் (பறையர்) திருப்புவனம் மந்திரிச் சமயத்தார்க்குமுன் மஞ்சள் கொடிபிடித்து வருவார். பிற சமயத்தார்களும் மேற்குறித்தோரில் காரைச்சேரி சமயத் தாரும் ஆண்டாரின் தளபதிகளாவர். இவையனைத்தும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். சமயத்தார்கள் அனை வரும் புடைசூழவே ஆண்டார் சித்திரைந் திருவிழாளில் பல்லக்கில் வருவார். திருமாலை ஆண்டான் வழியினரும். திருமாலைதந்தான் நோழப்பன் வழியினரும் பல்லக்கு ஏறிவகும் சிறப்பினை ஆண்டுக் கொருவராக மாறிமாறிப் பெறுவர். 4.12. தளபதி சமயத்தார் பணி : தளபதிகளான சமயத்தார் ஆண்டாரின் பிரத்நிதிகளாகச் செயல்படுகின்றனர். இவர்களுக்குத் தங்கள் கிராமந்தையொட்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/68&oldid=1467927" இலிருந்து மீள்விக்கப்பட்டது