10
அழகு மயக்கம்
முருகன்: வசந்தாவைத் தவிர வேறு யாருக்கும் இன்று என் உள்ளத்தில் இடம் இல்லை.
விஜயன்: அவள் நாளைக்கு உதகை புறப்படப்போகிறாள். பிறகு...
முருகன்: யார் சொன்னது? அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவள் என்னை விட்டுப் போகமாட்டாள்.
விஜயன்: படம் முடிந்துவிட்டதா?
முருகன்: அநேகமாக முடிந்துவிட்டது. இன்று முடிப்பு மெருகு கொடுக்கப் போகிறேன். அவள் சற்று நேரத்தில் இங்கு வருவாள்.
விஜயன். அப்படியானால் நீ எல்லாம் தயார் செய். நான் போய்வருகிறேன். நாளை மாலையில் சந்திப்போம்.
[வெளியே போகிறான். முருகன்
பரபரப்புடன் ஏதோ செய்ய
முயல்கிறான்.]
காட்சி நான்கு
அதே ஓவியச்சாலை. வசந்தா நின்று கொண்டிருக்கிறாள். ஒவியம் தீட்டிக்கொண்டிருந்த முருகன் தூரிகையைக் கிண்ணியில் எறிந்துவிட்டு எழுந்து அவளை நோக்கி மெதுவாக வருகிறான்!
முருகன்: வசந்தா, படம் முடிந்துவிட்டது. பொறுமையோடு எனக்கு அதை எழுத உதவி புரிந்த உனக்கு வந்தனம் கூற வேண்டாமா?
வசந்தா: அந்த மாதிரி உபசாரம் அவசியமானால் கூறுங்கள்.
முருகன்: உபசார வார்த்தை உன்னிடம் வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். இருந்தாலும் ஒவியனுடைய கடமை அதுவல்லவா?