பக்கம்:அழியா அழகு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அழியா அழகு

அவனிடம் மனம் ஈடுபட்ட மாதர்கள், "ஐயோ! இந்த வில்லை எதற்காக இங்கே கொண்டு வந்தார்கள்? பேசாமல் இந்தக் கட்டழகனுக்குச் சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடலாமே! நம் மன்னருக்கு இது தெரிய விவ்லையே!” என்று அங்கலாய்க்கிரு.ர்கள். அவர்கள் விருப் பத்திற்காக, உறுதிமொழியைத் தளரவிட முடியுமா?

இராமன் வில்லின் அருகே செல்கிருன், கம்பன் அவன் செல்வதை அழகாக ஒரு பாட்டில் நான்கு உவமைகளே வைத்து வருணிக்கிருன்.

பெண்கள் தமக்குத் தோன்றியவற்றைச் சொல்ல, கல்லவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, தேவர்கள் உவகையடைய, இராமன் எழுத்து வில்லினிடம் செல்கிருன். வானத்தை மூட்டும்படியாகத் துள்ளும் சிங்கமும் பெரிய இடபமும் பொன் மலேயும் யானையும் காணும்படியாக கடக் தானம்,

தோகையர் இன்னன சொல்லிட கல்லோர் ஒகை விளம்பிட உம்பர் உவப்ப மாக மடங்கலும் மால்விடை யும்பொன் நாகமும் காகமும் காண கடந்தான, ! (தோகையர் - மயிலேடபோன்ற மகளிர். இன்னன - இத் தகைய வார்த்தைகளே. ஒகை - மகிழ்ச்சி ஆரவாரம். உம்பர் - தேவர், மாகம் - வானம். மடங்கல் - சிங்கம். மால் விடை - பெருமையையுடைய ஏறு. பொன் காகம் - பொன்மலை. காகம் - யானே.)

தான் இருந்த இடத்திலிருந்து இராமன் வில் இருந்த இடத்துக்கு கடக்கிருன். அந்தச் சமயத்தில் கம்பன் நான்கு நிலைகளை நமக்குக் காட்டுகிருன்: சிங்கத்தைப்போன்ற கிலே ஒன்று, மால் விடையின் கிலே ஒன்று, பொன்மலையின்

1. கார்முகப். 2ே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/12&oldid=523214" இலிருந்து மீள்விக்கப்பட்டது