பக்கம்:அழியா அழகு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1} 8 அழியா அழகு

"அதோ ஆடுகிற கொடிகளுடன் படை வருகிறது. பாருங்கள். அந்தப் படை அறத்துக்கு எதிரான படைத அறத்தைப் பகைத்தவர் அறம் உடையோரைத் துரத்திவிட எடுத்த படை. அந்தப் படையால் அறத்துக்கு ஊறு நேர்ந்தால், எல்லோருக்குமே திங்கு உண்டாகிவிடும், ஆகையால் அந்த ஆடு கொடிப்படையை நாம் சாட வேண்டும், அறத்தவரே ஆளும்படி கிலே நாட்ட வேண்டும்: அதனால் கம்முடைய சாதிக்கே பெரும்புகழ் உண்டாகும். "பெரிய மன்னர்கள் எல்லாம் அறத்தை மறம் சாட முற்பட்டபொழுது சும்மா இருந்தார்கள். அத்தகைய செவ்வியில் வேட்டுவச் சாதி முன் வந்தது; அறத்துக்கு. எதிரான மறப்படையைச் சாடி அறத்தவரே ஆளும்படி இந்த கிலத்தில் அவர்கள் கையில் ஒப்பித்தது' என்று. உலகம் நம் புகழைக் கூறும் அந்தப் புகழை நீங்கள் விரும்பி அடையமாட்டீர்களா?' என்று முதலில் ஒரு கேள்வி கேட்டு, அவர்களுடைய புகழாசையைத் தூண்டு: கிருன். அறம் ஆளவேண்டும் என்ற கியாயத்தையும். வேட்டுவச்சாதி புகழ் அடைய வேண்டும் என்ற ஆசையையும் ஒருங்கே இணைத்துச் சொல்கிருன்.

" ஆடு கொடிப்படை சாடி அறத்தவ

ரே ஆள வேடு கொடுத்தது பார்எனும்இப்புகழ்

மேவிரோ?

(சாடி - அழித்து. வேடு வேட்டுவச் சாதி, பார் . பூமியை, அறத்தவரே ஆள அவர்களுக்குப் பாரைக் கொடுத் தது வேட்டுவச் சாதி என்ற புகழ்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/126&oldid=523328" இலிருந்து மீள்விக்கப்பட்டது