பக்கம்:அழியா அழகு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியப்பும் உருக்கமும்

ஒருதனியே நாவாயில் வந்த குகன் பரதன் முன் சென்று தொழுதான். பரதன். தலைவளேந்து வணங்கினன். உடனே குகன் பரதனுடைய கிருவடியில் வீழ்ந்து பணிந்தான். பரதன் அவனே எடுத்து மிக்க அன்போடு தழுவிக்கொண் டான்,

குகனுக்கு, "இந்தத் துயரக் கோலத்தோடு இந்தப் பெருமான் வரக் காரணம் என்ன?’ என்ற கேள்வி நெஞ்சில் இருந்துகொண்டி ருந்ததல்லவா? பரதனைப் பார்த்தால் இராமனைப் போன்ற தாமரைச் செங்களுகை இருக்கிருன் அவனுடைய திண்ணிய தோள்கள் இரும்புத் தூண்களிலும் வலியனவாக இருக்கின்றன. யாரேனும் வலிமையுள்ள பகைவன் அவனே காட்டைவிட்டு ஒட்டியிருக்க முடியாது. பரதன் வலிமையில்லாதவன் அல்லன். "அப்படியானல் இவன் வந்த காரணங்தான் யாது?”

குகன், பரதனிடமே இந்தக் கேள்வியைக் கேட்டான். "எழுவினும் உயர்ந்த தோளே யுடையவனே இப்படி வந்த தற்குக் காரணம் யாது! என்று கேட்கிருன்.

தழுவின புளினர் வேந்தன்

தாமரைச் செங்க ணுனை "எழுவினும் உயர்ந்த தோளாய்,

எய்தியது என்ன?" என்ன ! (தழுவின - பரதல்ை தழுவப்பெற்ற புளினர் வேந்தன்" வேடர்க்கு அரசனை குகன். தாமரைச் செங்களுனை -

1. குகப்படலம், 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/138&oldid=523340" இலிருந்து மீள்விக்கப்பட்டது