பக்கம்:அழியா அழகு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அழியா அழகு

அரசைக் கொள்ளேன் என்று சொன்ன பரதன், தீவினை என்ன நீத்துப் போயின. பரதன். அவனேவிட உயர்ந்தவன் ஆகிவிட்டான் அல்லவா? ஆகவே, குகன்,

" ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ

தெரியில் அம்மா!' என்று வியந்து பாராட்டுவதற்கு ஏற்ற காரணங்கள் இருக்கின்றன. .

இப்படிச் சொன்னதனால் குகனுக்கு இராமனிடம் உள்ள அன்பு குறைந்துவிட்டது என்பது பொருள் அன்று. பரதனுடைய பெருமையை அளக்கும் அளவு கோலாக இராமன் ஆகிவிட்டான். பொன்னின் மாற்றை அளக்கும் ஆணிப்பொன் உயர்ந்ததுதான். அப்படியே, "ஆயிரம் இராமர் உனக்கு ஒப்பாவார்களா?' என்று பேசும் குகனுடைய உள்ளம், பரதன் பெருமைக்கு உரையாணியாக இராமனே வைத்துப் பார்க்கிறது.

முன்னே பரதன மதியாது கோபம் பெருகிய குகன் இப்போது கேர் எதிர்த்தட்டிலே கின்று பரதனுடைய சிறந்த அன்பை உணர்ந்து வியந்து குழைந்து உருகினன். பரதன் இராமபக்தி உருவமாக கின்ருன். இதனை உணர்ந்த குகன், இராமனைவிட அவன்பால் உள்ள அன்பு பெரிது, இராமபக்தி வலிது என்று சொல்வதாகவே கொள்ள வேண்டும். அவன் அப்படிச் சொல்லவில்லை ஆனல் உண்மை அதுதான். இராமனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்த குகன் இராமனிடம் பரதன் வைத்த அன்பின் வலிமையைக் கண்டு இப்போது உருகினன்; வியந்தான்.

"இந்த ஏழை வேடணுகிய யான் உன்னை எவ்வாறு புகழவல்லேன் கதிரவனுடைய ஒளிக்கற்றை மற்ற ஒளிகளே யெல்லாம் மங்கச் செய்வதுபோல அரசர்கள் புகழும் பெருமையை உடைய உங்கள் குலத்தில் வந்த அனைவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/144&oldid=523346" இலிருந்து மீள்விக்கப்பட்டது