144 அழியா அழகு
ஒருவருடைய கூற்றில் வரும் சொற்கள் அவருடைய பண்பையும் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்துவது. இயல்பு. மகாகவிகள் தம்முடைய காவியங்களில் வரும் பாத்திரங்களின் கூற்றில் அவர்களுடைய உள்ளம் கிழலிடு: வதைக் காட்டி யிருப்பார்கள். அவ்வகையில் சீதையைப் பற்றிப் பல சொல் சொல்லாமல் இருந்ததே குகனுடைய பண்பைக் காட்டும் வண்ணம் இந்தப் பாடலே அமைத்திருக் கிருன் கம்பன்.
敬響 攀 豪
குகன் பரதனுடைய விருப்பப்படி அவனுடன் வந்த வர்களே யெல்லாம் எற்றி அக்கரைக்குக் கொண்டு போய்" விடுவதற்கு ஏற்ற வகையில் பல தோணிகளைக் கொண்டு: வரும்படி தன் ஏவலாளர்களுக்குச் சொன்னன். அவர்கள் ஆயிரக்கணக்கான தோணிகளைக் கொணரவே அவற்றில் யாவரும் ஏறிக் கொண்டு கங்கையைக் கடக்கலானர்கள்.
பரதனும் சத்துருக்னனும் தாய்மார் மூவரும் சுமந்திரனும் குகனும் ஓர் ஒடத்தில் ஏறிக்கொண்டார்கள். முதலில் பரதனேயும் சத்துருக்னனேயும் கண்ட குகன். இப்போது அவர்களுடைய தாய்மார்களைப் பார்த்தான். கோசலேயை யாவரும் மரியாதையுடன் தொழுது நிற்பதைக் கண்டு அந்தப் பெருமாட்டி அவர்களுக்குள் தனிச் சிறப் புடையவள் என்பதை உய்த்துணர்ந்து கொண்டான். ஆதலால் முதலில் அப்பிராட்டியைத் தொழுது, பரதனிடம், "இப்பிராட்டி யார்?' என்று கேட்டான்.
சுற்றத்தார் தேவரொடும் தொழகின்ற
கோசலையைத் தொழுது கோக்கி, 'வெற்றித்தார்க் குரிசில், இவர்
ஆர்?' என்று குகன்வினவ. '
1. குகப்படலம், 65