பக்கம்:அழியா அழகு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவு கண்ட்வர் 113

இறைவன் திருவருள் அநுபவம், வேறுபாடின்றி ஒத்து கிற்கும் என்ற சமரசக் கருத்தையும் வற்புறுத்துகிருன்.

3

மகளிர் இராமனைக் கண்டதைச் சொல்லும்போது' தோள், தாள், கை என்ற மூன்றையும் சொன்னுன் கம்பன். தோள், கை, தாள் என்ருல் இறங்குமுகமான முறை என்றும், தாள், கை, தலை என்ருல் ஏறுமுகமென்றம் சொல்லலாம், இங்கே அப்படி இல்லை. இந்த முறை வைப் புக்குப் பொருத்தம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்.

இராமனுடைய பெருமையை விசுவாமித்திரர் வாயிலாகவும் ளிேலும் உணர்ந்துகொண்டவர்கள் அவர்கள். முக்கியமாகத் தாடகை வதம் செய்க தோள்வலியும், அகலிகை சாபம் போக்கிய அ4 யருளும், சீதையை மணக்க வில்லை ஒடித்த கரத்தின் பண்பும் அவர்களுக்கு என்ருகத் தெரியும். இக்க மூன்று நிகழ்ச்சிகளில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் ஈடுபாடு மிகுதி. அப்படி ஈடுபட்டவர்களை வரலாறு நிகழ்ந்த முறையிலே வைக்கிருன் கம்பன். தாடகை வதத்தை எண்ணித் தோள்வலியைப் போற்றியவர்கள் கதையின் முதல் அத்தியாயத்தைப் படித்தவர்களைப் போன்றவர்கள். அவர்கள் தோளைக் கண்டார்கள் என்று கூறுவதில் ஒர் அமைவு இருக்கிறதல்லவா!' இப்படியே தாளேயும் தடக்கையையும் கண்டவர்களே அடுத்தடுத்து வைக்கிருன் புலவன்.

வாள்கொண்ட கண்ணுர் யாரே வடிவினை முடியக் கண்டார் என்ற கேள்விக்கு விடை, "யாரும் இலர்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆல்ை ஒருத்தி இருக்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/19&oldid=523221" இலிருந்து மீள்விக்கப்பட்டது