பக்கம்:அழியா அழகு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 12 . அழியா அழகு

அவள்தான் சீதை. இராமனுடைய வடிவு முழுவதையும் காணும் ஆற்றலும் உரிமையும் அவள் ஒருத்திக்குத்தான் உண்டு. மற்ற மகளிரின் அநுபவம் வேறு; அவள் அநுபவம் வேறு. மற்றவர்கள் கண்ட முறை வேறு: அவள் கண்ட முறை வேறு.

ஒரு பெரிய மாளிகை. அதைப் பார்க்கவேண்டும் என்றெண்ணிச் சிலர் அதை அணுகுகிருர்கள். அதன் ஒரு பக்கமாக வந்து சுவரின் உயரத்தையும் உறுதியையும் காண்கின்றனர் சிலர். வேறு ஒரு பக்கத்திலிருந்து வந்து அந்தப் பக்கத்து அமைப்பைக் கண்டு களிக்கின்றனர் சிலர். இப்படி வெவ்வேறு கோணத்தில் கின்று பலர் பார்க்கிருர்கள். அவர்கள் அந்த மாளிகையின் பெருமையை ஓரளவே உணர முடியும். அதன் வடிவு முழுவதையும் உணர இயலாது.

ஆனல் வேறு ஒருவன் அந்த மாளிகையின் வாசற் பக்கம் வருகிருன். வாசலக் கண்டு உள்ளே நுழைகிருன். அவன் ஒருவனே மாளிகையை முற்றக் காணமுடியும். |வெளியில் ஒவ்வொரு பக்கத்தில் கின்று பார்க்கிறவர்கள் காண முடியாத கலங்களே அவன் கண்டு களிக்கலாம்.

தோளையும் தாளேயும் கரத்தையும் கண்ட மகளிர் முன்னே சொன்னவர்களைப் போன்றவர்கள்; இராம லாவண்யம் முழுவதையும் காணும் தகுதியில்லாதவர்கள். அவர்கள் கண்ட மூன்றும் மாளிகையின் பக்கங்கள். அதன் வாயிலைப் போல இருப்பது ஒன்று உண்டு. அதனை அவர்கள் காணவில்லை. காண்பதற்குரிய உறுதியும் தகுதியும் உரிமையும் அவர்கள்பால் இல்லை. அந்த வாயில் எது? அதுதான் கண். - -

சீதையும் இராமனேக் கண்டாள். அந்தக் காட்சியைக் கம்பன் முன்னே சொல்லியிருக்கிருன். மங்கையர்க் கினிய மருந்தாக இருக்கும் சீதை தன் கன்னி மாடத்தே சின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/20&oldid=523222" இலிருந்து மீள்விக்கப்பட்டது