பக்கம்:அழியா அழகு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவு கண்டவர் 13

இராமனும் இலக்குவனும் விசுவாமித்திர முனிவரைத் தொடர்ந்து வீதி வழியே சென்ருர்கள். அப்போது இராமன் சீதையைப் பார்த்தான்; அந்த வண்ணத் திருமாளிகையின் வாயிலாகிய கண்களைப் பார்த்தான். அவளும் இராமனுடைய கண்களைப் பார்த்தாள்.

எண்ணரு கலத்தினுள் இனையள் நின்றுழி கண்ளுெடு கண்ணிணை கெளவி ஒன்றைஒன்று உண்ணவும் நிலைபெரு துணர்வும் ஒன்றிட அண்ணலும் கோக்கினன்; அவளும் நோக்கினுள் (கலம் - குணமும் அழகும். இனேயள் கின்றுழி -- இப்படி நிற்கிற போது, அண்ணல் - இராமன்.)

இராமன் முதலில் பார்க்கப் பின்பு சீதை பார்த்தாள். இதுவே முறை. சீதை இராமனுடைய கண்களைப் பார்த் தாள். இருவரும் பார்த்த பார்வை வெறும் பார்வை அன்று. கண்கள் ஒன்றை ஒன்று கெளவி உண்டன. அப்பால், உணர்ச்சி ஒன்றியது.

பருகிய கோக்கெனும் பாசத் தாற்பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாட்கண் கங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினர். ' கண்ணெனும் வாயில் வழியே புகுந்து இருதய சிங்காசனத்தில் ஏறிக்கொண்டார்கள். அப்புறம் ஒருவர் ஒருவருக்கு உரியவர் ஆகிவிட்டனர்.

மிதிலேப் பெண்கள் வாள்கொண்ட கண்ணுர்; சீதையும் வாட்கண் கங்கைதான். இருசாரார் கண்களிலும் வேறுபாடு இல்லை, ஆனால் இராமன் அந்தப் பெண்களைப் பார்க்கவில்லே. சீதையைப் பார்த்தான். அவர்களும் அவன்

1. மதிகலக் காட்சி. 35 2. டிெ 87.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/21&oldid=523223" இலிருந்து மீள்விக்கப்பட்டது