பக்கம்:அழியா அழகு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்த மாமணி 2033

சீதையைக் கண்ட செய்தியைத் தெரிவிக்கிருன். இது. சுந்தர காண்டத்தில் உள்ள வரலாறு.

கடல் தாவு படலம் முதல் திருவடி தொழுத படலம் வரையில் கவிஞன் அநுமனேடு உலவுகிருன். நாமும் அதும ைேடு சென்று இலங்கையைப் பார்க்கிருேம், இராவணனைப் பார்க்கிருேம்; சீதையைப் பார்க்கிரும்.

'சீதையை இன்னும் காணவில்லையே! அவள் உயிருடன் இருக்கிருளோ! என்று ஏங்கிய கிலேயிலிருந்த அநுமன் சீதையைக் காணுவது கதையில் ஒரு முக்கிய மான இடம். அநுமன் சீதையைக் கண்ட செய்திக்குத் தலைமை கொடுக்க எண்ணியே கம்பன் அப்படலத். துக்கு, காட்சிப் படலம்' என்ற பெயரை அமைத்திருக் கிருன். அநுமன் காண்பதற்கு முன், சீதை திரிசடை. யோடு பேசுவது. பல பலவற்றை எண்ணிக் கவல்வது. அவளுடைய உடல், உள்ளம், உணர்ச்சி ஆகியவற்றின் கிலே முதலியவை வருகின்றன. கண்டபின் அநுமனுக்கு. உண்டாகிய உவகையையும் கவிஞன் சொல்கிருன். இந்த இருவகைப் பகுதிகளுக்கும் இடையிலே அநுமன் சீதையைக் கண்ட செய்தியாகிய காட்சியை ஒரு பாடலில் கம்பன் சொல்லியிருக்கிருன், அது பின் வருமாறு:

விரிமழைக் குலம்கிழித்து

ஒளிரும் மின்எனக் கருநிறத்து அரக்கியர்

குழுவிற் கண்டனன் உருகிறத்து ஒருதனிக்

கொண்டல் ஊழியான் இருநிறத்து உற்றவெற்

கியைந்த காந்தத்தை. '

1, காட்சிப், 63,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/211&oldid=523413" இலிருந்து மீள்விக்கப்பட்டது