பக்கம்:அழியா அழகு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அழியா அழகு

கொன்றும் நீங்கலது இப்பொழுது

அகன்றது. உன் குலப்பூண்

மன்றல் ஆகமாம் காந்தமா

மணிஇன்று வாங்க !

நெடுநாட்களாகத் தரசதன் மார்பிலே ஒரு வேல் புதைந்திருந்ததாம்: அதை இப்போது ஒரு காந்த மாமணி வாங்கிவிட்டதாம். கைகேயியின் வரத்தை வேலாகவும் இராகவன் மார்பைக் காந்தமணியாகவும் உருவகம் செய் திருக்கிருன் கம்பன்.

பழங்காலத்தில் போர்க்களத்தில் புண்பட்ட வீரர் களுக்குப் போர் கின்றவுடன் மருத்துவம் செய்வார்களாம். அவர்கள் உடம்பில் வேலின் முனையோ, வேறு படைகளின் துணுக்குகளோ புகுந்திருந்தால் அவற்றை வெளியிலே எடுக்க ஒரு தந்திரம் செய்வார்களாம். இரும்பைக் காந்தம் இழுக்கும் அல்லவா? காந்தமணியைப் புண்ணுள்ள இடங் களில் வைத்தால் உள்ளே ஒடிந்து புதைந்திருக்கும் இரும்புப் படைகளின் பகுதிகளே அந்த மணி இழுத்துவிடுமாம் - இப்படி யாரோ ஒருவர் சொல்ல கான் கேட்டிருக்கிறேன். தசரதனுக்கும் அதுபோல ஒருவகை மருத்துவம் அல்லவா இங்கே நிகழ்கிறது? கம்பன் அமைக்கும் உருவகத்திலே அந்த மருத்துவ நுட்பம் வெளியாகிறது. மார்பில் புதைந்த வேலைக் காந்த மாமணி வாங்கிவிட்டதாக உருவகம் செய் திருக்கிருன்.

இந்தச் செய்தியோடு முன்னே மயக்கத்தைத் தந்த பாட்டை ஒப்பு கோக்கினேன். இங்கே, புதைந்த வேலைக் காந்த மாமணி வாங்கிய செய்தி வருகிறது. காந்த மாமணி என்று சொன்னது மிகவும் பொருத்தமாக

1. மீட்சி. 48.

அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/218&oldid=523420" இலிருந்து மீள்விக்கப்பட்டது