224 அழியா அழகு
படம் எழுதின அழகோடு பார்க்க ஒருவருக்கும் கிடைக்க வில்லே.
அநுமன் சீதையைப் பார்த்தபோது அவள் உருவம் இன்னபடி இருந்தது என்பதைக் கூறுகையில் கம்பன் சொல்லும் உவமை கூர்ந்து அறிவதற்கு உரியது. முன்பு" எழுத இயலாமல் திகைத்த மதனன் பின்பு தகுதியினல் உயர்ந்து அகங்களுகிச் சீதையை ஒவியத்தில் எழுதிவிட் டான். அந்த அழகான ஓவியம் கவனக் குறைவில்ை புகைமண்டிய ஓரிடத்தில் இருந்தது. ஒரேயடியாகப் புகை படிந்து அது மங்கிவிட்டது. கண்ட வுடனே விளக்கமாகக் கண்ணேக் கவர்ந்து, இன்னுள் என உணரும் வண்ணம் இருந்த ஓவியம், கூர்ந்து கவனித்தாலன்றிப் புலப்படாதபடி. மாசுபடிந்து ஒளியிழந்திருந்தது. அந்த ஒவியந்தானே இது என்று எண்ணும்படி இருந்தாள் சீதை' என்கிருன் கம்பன்.
ஆவி யந்துகில் புனைவதொன்
றன்றிவேறு அறியாள்; தூவி அன்னமென் புனலிடைத்
தோய்கிலா மெய்யாள்; தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு
அனங்கவேள் செய்த ஓவியம்புகை உண்டதே
ஒக்கின்ற உருவாள். ' (ஆவி அம் துகில் - பாலாவியைப் போன்ற அழகிய மெல்லிய ஆடை தூவி அன்னம் மென்புனல் - மெல்லிய, சிறகுகளை உடைய அன்னங்கள் விளையாடும் மெல்லிய நீரில். தேவு - முகக்கும்.)
சீதையின் உடம்பு ஒரு காலேக்கு ஒரு கால் மெலிந்து கொண்டே வருகிறது. இதனேக் கவிஞன் நுட்பமாகப்
1. காட்சிப் 11.