226 அழியா அழகு
இகளக்காது. சீதையின் கண்கள் இன்னும் நெடியனவாகவே இருந்தன. ஆனல் அவள் உள்ளத்தில் கின்ற துயரை வெள்ளமாக வடித்துக் கொண்டிருந்தன. கடலளவு ஆழமும் அகலமும் உடைய கண்ணிலிருந்து பெருகிய நீர் சிரம்பிய தடாகத்தினிடையே அன்னம் போல இருந்தாள் சீதை."
கடல்துணை கெடியதன் கண்ணின் நீர்ப்பெருங் தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள். ' கண்ணின் அடையாளத்தைக் கொண்டு இவள்தான் சிதை என்பதைக் கண்டுகொண்டான். பின்னே இந்தச் செய்தியை இராகவனுக்குச் சொல்லும் போது,
"கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்' " என்று உணர்த்துகிருன்
கண்ணக் கொண்டு அடையாளம் கண்டு கொண் டவன், இராமன் தந்த படத்தோடு ஒப்பு கோக்குகிருன். அதே படம் இங்கே இல்லே, ஆனால் அதில் உள்ள அமைப் புக்கு மாருகவும் இல்லை. அந்த வண்ணம் இல்லை; வடிவு இருக்கிறது. மெருகு இல்லை; வரைகள் உள்ளன. பூரிப்பு இல்லை; குறிப்புகள் இருக்கின்றன.
"எள்ளரும் உருவில்கல் இலக்கணங்களும்
வள்ளல்தன் உரையொடு மாறு கொண்டில "
னவை அப்படி அப்படியே இருக்கின்றனவே! என்று. வியந்துகொள்ள இடம் இல்லே 'அவன் சொன்ன இலக் கணங்களுக்கு மாருக இல்லே' என்று எதிர்மறை வாய். பாட்டில் அவன் திருப்தி அடைகிருன்.
1. காட்சிப் படலம், 64.
2, திருவடி தொழுத. 58. 3. காட்சிப். 66,