பக்கம்:அழியா அழகு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அழியா அழகு

கவிஞனும் ஓவியனும் பல குறிப்புகளைத் தம் காவியத் திலும் ஓவியத்திலும் காட்டுவார்கள். ஆலுைம் ஓவியனேயும் விஞ்சிக் கவிஞன் மேற்செல்லும் ஆற்றல் படைத்தவன். ஒவியன் இருப்பதைக் காட்டுவான்; நடப்பதைக் காட்டு வான். இல்லாததையும் கடவாததையும் காட்ட அவளுல் இயலாது; கவிஞனே அவற்றையும் காட்டுகிருன்.

ஒன்றும் விளையாமல் ஒரே பொட்டலாக உள்ள கிலத்தை ஒவியன் எழுதுகிருன், அதைப் பார்க்கும் நமக்கு அது பொட்டல் என்று தெரியுமே அன்றி அந்தக் காட்சி யிலே அழகு தோன் ருது: கவனம் செல்லாது ஒவியன் எழுதிக் காட்ட அங்கே ஒன்றும் இல்லை. கவிஞனே, அங்கே. அருவி இல்லே, பயிர் இல்லை. பச்சை இல் லே; மேடு இல்லை, பள்ளம் இல்லே: மனிதன் இல்லை; விலங்கு இல்லை; மலே இல்லை, மடு இல்லை என்று அழகாக இல்லாதவற்றைச் சொல்லிச் சில நேரம் அவ்விடத்தில் நம்மை கிறுத்தி: விடுவான்.

அவ்வாறே நீலமாலை செய்ததைச் சொல்வதற்கு முன் அவள் செய்யாததைச் சொல்லி, உவகை என்ற உணர்ச்சி அவளை ஆட்கொண்டு தன்னை மறக்கச் செய்தது என்பதை, நுட்பமாகப் புலப்படுத்துகிருன். -

வந்தடி வணங்கிலள். அவள் வணங்கவில்லை; சரி. பின் என்ன செய்தாள்? அவள் என்ன செய்ய வந்தாள்? இராமன் வில் ஒடித்த நற்செய்தியைச் சொல்லத்தான் அவ்வளவு வேகமாக ஓடி வந்தாள். செய்தியினல் விளையும் உவகை சீதையைச் சார்வ. தற்குள் அவளே அதில் மூழ்கிவிடுகிருள். வந்து கின்றவள் அதைச் சொன்னளா? சொல்லவில்லை, ஏதோ கா கூ என்று சத்தம் போட்டாள்!

வழங்கும் ஒதையள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/30&oldid=523232" இலிருந்து மீள்விக்கப்பட்டது