பக்கம்:அழியா அழகு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாற்றம் 57

இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்கு இடர் உண் டாகுமோ?' என்றும் கேட்டாள்.

'பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்

உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்; விராவரும் புவிக்கெலாம் வேத மேயன இராமனைப் பயந்தஎற் கிடர்உண் டோ?' என்ருள். (பராவரும் - புகழ்வதற்கரிய பயக்க - பெற்றதல்ை. உராவரும் - சுழலும். உறுதி - நன்மை. எற்கு - எனக்கு 1

இங்கே கைகேயி இராமனைத் தன் பிள்ளையாகவே வைத்துப் பேசுகிருள். அவன் தனக்கு வரும் இடை ஆற்றைப் போக்கி இன்பம் தரும் புதல்வன் என்ற எண்ணம் அவள் கருத்தில் அழுந்தப் பதிந்திருக்கிறது. இராமனிடம் அவளுடைய அன்பு எவ்வளவு ஆழமாக இருந்திருக்க வேண்டும்! இதனைப் புலப்படுத்தவே கம்பன் அடுத்த பாடலின் தொடக்கத்தில், ஆழ்ந்த பேரன்பினுள் என்று கூறுகிருன், இராமனேத் தன் மகளுகச் சொன்னது சம்பிர தாயத்துககோ உபசாரத்துக்கோ அன்று; அந்த வார்த்தை ஆழ்ந்த அன்பின் விக்ளவாக வருவது. அந்த அன்பு அவள் உள்ளத்தினூடே ஆழமாக வேருன்றி கிற்கிறது, இதனைத் தான், ஆழ்ந்த பேரன்பினுள் என்ற தொடர் குறிக்கிறது.

கூனி இதைக் கேட்டுச் சும்மா இருப்பாளா? "உன்

வாழ்வு போயிற்று. புத்திசாலியாகிய கோசலை தன் அறிவுத் திறமையால் வாழ்வு பெற்ருள்' என்று வேறு பிரித்துப் பேசிள்ை.

ஆழ்ந்தபே ரன்பிளுள் அனய கூறலும்

சூழ்ந்ததீ வினைகிகர் கூனி சொல்லுவாள்:

"வீழந்தது கின்கலம், திருவும் வீந்தது;

வாழ்ந்தனள் கோசலை மதியிஞல்" என்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/65&oldid=523267" இலிருந்து மீள்விக்கப்பட்டது