பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

35



வண்டியை வெளியே எடுத்து வையுங்கள் என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று நான் நினைப்பதற்குள், அவரது பேச்சில் ஆவேசம் தெரிந்தது.

இந்த விளம்பர அட்டையை யார் தொங்கவிட்டது? என்ற கேள்விக்கு எழுந்துபோய், நான்தான் என்றேன்.

இங்கே ஏன் கட்டினர்கள் என்றார். கார்ப்பரேஷன் தந்திக்கம்பம் தானே! அதுதான் கட்டி வைத்தேன் என்றேன்.

என் கடை முன்னே அப்படி கட்டக்கூடாது என்றார். குரல் ஓங்கியது.

எங்கள் வீட்டு வாசலில் நீங்கள் கடை வைத்திருக்கிறீர்களே என்றேன்.

அது வீட்டுக்காரர் இஷ்டம். என் கடைக்கு முன்னே விளம்பரம் ஒன்றை கட்டி வைக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

என் பதிப்பகத்துக்கு ஒரு விலாசம் வேண்டுமே? விளம்பரம் வேண்டுமே என்றேன்!

விலாசமே இல்லாத உங்களுக்கு விளம்பரம் எதற்கு? அவசியம் விளம்பரம் வேண்டுமென்றால், ரெங்கநாதன் தெருவில், ஒரு கடையை வாங்கி, அதிலே உங்கள் போர்டை எழுதி வையுங்கள். முடிந்தால் செய்யுங்கள். இல்லையேல் பேசாமல் போங்கள் என்று பேசியபடி, அந்த அட்டையைப் பிய்த்து வந்து, என் கையில் தந்துவிட்டுப் போனார்.

தெருவில் பத்துபேர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கடை வாங்க கையாலாகதாவன் என்பது போல் அவர் பேசியதைப் பார்த்து, நிலை குலைந்து போனேன்.

ஹலோ Mr. இங்கே வாங்க. ரெங்கநாதன் தெருவுல கடை வாங்கி, அதுலதானே போர்டு வைக்கச் சொன்னிங்க.