பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அவமானமா? அஞ்சாதே!ஸஹீ.. உங்க சவாலை ஏத்துக்கறேன். கடைய வேற எங்கயும் வாங்கப் போறதில்லே. உங்கக் கடைக்கு எதுத்த மாதிரியே ஒரு கடையை வாங்கி, நீங்க தினம் பார்க்குற மாதிரியே பெரிய பெரிய சைஸ்ல பத்து போர்டு வைக்குல நான்... பிறக்குல என்று கத்தினேன். மானத்தின் ஒலம் அது.

கெளரவமே வாழ்க்கை என்று கருதிக் கொண்டு வாழ்ந்த என் கெளரவம், சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள் முன்னே சுக்குநூறாகிப் போனதால், சுருண்டு போனேன்.

எப்படி ஒரு கடை வாங்குவது? ரெங்கநாதன் தெருவில ரோட்டில் உள்ள ஒரு 5 அடிக்கு 5 அடி இருக்கும் இடத்திற்கே அந்தக் காலத்தில் 5000, 10000 ரூபாய் என்பது பகடி அதை Goodwill என்பார்கள். அனாமத்தாகத் தரப்படும் பணம் அது. அப்புறம் அட்வான்ஸ், வாடகை.

சவால் விட்டு வந்து உட்கார்ந்த என் சரீரம் முழுவதும் வியர்வை வெள்ளமாக ஓடியது. மனதோ புயலாக சாடியது.

எப்படி சவாலுக்கு பதில் சொல்ல முடியும் ஏழ்மை என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது. -

உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். அதற்கு பதில் கெளரவம் கத்திப் பார்த்தது.

புத்தகங்கள் எழுதி, பதிப்பித்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.

கடையில் உள்ள படிக்காத அந்த இளைஞர்கள் பதினேழு மணி நேரமும் உழைக்கிற போது, உடற்பயிற்சியும் உள்ள முயற்சியும் உள்ள என்னால் உழைக்க முடியாதா? உழைக்கத் தொடங்கினேன். இரவு முழுவதும் எழுத்தும் படிப்பும், பகல் முழுவதும் புத்தகம் விற்க அலைச்சல் அதற்கிடையில் பாடி TVS கம்பெனியில் விளையாட்டு அலுவலர் உத்தியோகம்.

பணம் திரட்டுவதற்கு முன்பு, எந்தக் கடை காலியாகும்: யார் விற்பதற்கு தாயராக இருக்கிறார்கள் என்று கடை கடையாய் அலைந்து, வேண்டியவர்களை விசாரித்து புரோக்கர்களுக்கு தீனி போட்டுப் போட்டு, சல்லடையாய் சலித்தேன்.