பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

55



மாய்மாலமான வாழ்க்கை என்று மனிதர்கள் பேசிக் கொள்வது உங்கள் காதில் விழுந்திருக்குமே!

ஆமாம்!

அர்த்தமில்லாத ஒரு அர்த்தம் உள்ளதுதான் இந்த மனித வாழ்க்கை.

அதில் ஆனந்தமாக வாழ்வதென்பது முடியும் என்பது சிலர் கருத்து.

முடியவே முடியாது என்பது பலர் கருத்து.

பலரது கருத்தை நாம் பொய்யென்று புறத்தே தள்ளிவிடவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

தொட்டும் தொடாமலும், விட்டு விடாமலும், பட்டும் படாமலும், தொடர்ந்தும் தொடராமலும் துல்லியமாக வருவதுதான் அந்த எண்ணங்கள்.

அவைகளை அப்புறப்படுத்தவும் முடியாது. அப்பாலே போகவும் முடியாது.

முடியாது என்று முடிவுக்கு வந்து முனக வேண்டாம்.

முடியும் என்று நினைக்கிற போதே முடியாது என்ற வார்த்தை ஒடிந்து போகும். மடிந்து போகும். நமக்குள் நினைவுக்குள், துணிவுகள்தாம் வந்து நிமிர்த்தும், உயர்த்தும்.

நம்மில் எழுகின்ற காரியங்கள்தான் வீரியங்கள்தான் நம்மை எழுப்பும், செலுத்தும்.

நமக்கு நாமே துணை.

மற்றவர்கள் எல்லாம் பார்வையாளர்கள், பாசத்திற்குரிய தீர்வையாளர்கள்.

இப்படி எண்ணுகிற போதே உங்களுக்குள் ஒரு தெளிவு ஏற்படுகிறதல்லவா? ஏன் எப்படி என்பதை காண்போம்.

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்

உங்கள் புகழ் காலம் உங்கள் செயலில்