பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அவமானமா? அஞ்சாதே!


இளைஞர்களே! ஆசைகள் வருவது இயற்கைதான். சலனங்கள் சபலங்கள் எழுவது சகஜந்தான். தேவைகள் வந்து திணறடிப்பதும் வாழ்க்கைதான். அவற்றை அடைவதற்காக நீங்கள் அவசரப்படக்கூடாது. சின்னச் சின்ன பொருள்களை நயந்து விரும்பி உங்கள் கவனத்தைச் சிதற விடக்கூடாது.

பெரியவற்றை அடைய முடியும் என்று உரிய நிலை வரும்வரை, முயற்சிகளின் முனைப்பும் குறையக்கூடாது. எடுத்துக் கொண்ட முயற்சியில் பின்வாங்கவும் கூடாது.

ஆசைகளை அடக்கிக் கொண்டு, அறிவை கூராக்கிக் கொண்டு, அடுத்தது என்ன என்று தொடுத்துக் கொண்டே உங்கள் முயறசியைத் தொடர வேண்டும்.

கொக்கின் வெள்ளை நிறம் இளைஞர்களின் கள்ளங்கபடமற்ற எண்ணங்களைக் குறிக்கின்றன. பறக்க உதவும் இரு புறத்து இறகுகள் மனிதனின் வாழ்வுக்கு உதவும் இரண்டு வித ஞானங்கள்.

1. அறிவு ஞானம். 2. செயல் ஞானம்.

அதாவது ஒன்று தெளிவான அறிவு. இரண்டாவது தேர்ந்த செயல் அதாவது, திகைப்பில்லாத நீரோட்டமான செயல்.

ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கின் தவம் அது இளைஞர்களது வலிமையான விடாமுயற்சி விருப்பத்தை உறுதிப்படுத்தி வெற்றிக்கு இட்டுச் செல்லும் வேட்கையை, வைராக்கியத்தைப் போன்றது.

ஆகவே, தனக்குத் தேவையானதை மட்டும் தேடிப் பெறுவதும், பெறுவனவற்றிலும் பிரச்சனைகள் நேராத வாழ்க்கை லட்சியத்திற்கு ஊறு தராத உயர்ந்த பண்புகளடங்கியவற்றைப் பெறுவதற்கே, கொக்கு வாழ்க்கையானது நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது.

எப்படி அவற்றைப் பெற முடியும் என்று இப்போது குழப்பம் வந்து குவிந்திருக்குமே! வாழ்க்கை என்பது