பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. மூன்று வகை மனிதர்கள்


மனிதர்களை மிருகங்கள் என்று சமூக சாஸ்திரம் சமத்காரமாகக் கூறிவருகின்றது.

அதாவது சமுதாயம் என்னும் காட்டில், சந்தர்ப்பத்திற்கேற்ப கூடி வாழும் மிருகங்கள் என்பது சமூக வல்லுநர் கருத்தாகும்.

மிருகங்கள் ஏன் ஒன்று சேர்ந்து வாழ்கின்றன என்றால், தங்களுக்கு வரும் ஆபத்துக்களை தடுத்துக்கொள்ள, தவிர்த்துக்கொள்ள.

தாக்க வரும் பிற இன விலங்குகளை பயமுறுத்தி விரட்ட, பயமில்லாமல் கூடி வாழ, இப்படி கூட்டமாக சேர்ந்து மிருகங்கள் வாழ்கின்றன.

அப்படித்தான் மனிதர்களும் ஒன்று சேர்ந்தார்கள். பத்திரமாக வாழத்தான் ஒற்றுமை தேவை என்று கூடினார்கள், ஒருவரை ஒருவர் நாடினார்கள். தேடினார்கள்.

அதற்கு சமுதாயம் என்ற பெயர் சூட்டிக் கொண்டனர்

முதலில் தனித்தனியாக வனாந்தரங்களிலே வதிந்தவர்கள். பிறகு கூட்டமாகச் சேர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும் உதவ வேண்டும் என்று எழுதா உடன்படிக்கை ஒன்றையும் ஏற்படுத்திக் கொண்டார்கள் சமாதானம் ஒன்றே குறிக்கோள் என்பதாகச் சத்தியம் செய்து ஒலித்தார்கள் களித்தார்கள்.

சமுதாயம் என்ற சொல்லுக்கு கூட்டம், சங்கம், மக்களின்திரள், உடன்படிக்கை சமாதானம் என்று அர்த்தங்கள் இருக்கின்றன.

தாயம் என்று முதலில் ஒரு சொல்லை உருவாக்கிக் கொண்டனர். தாயம் என்றால் உரிமை கொண்ட சுற்றம்