பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

79


முறித்து, அதன் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் பெற்ற அறிவு. ஆசைகளுக்குத் தூபம் போடுகின்றன. தூண்டிலைப் போடுகின்றன. துரத்தி துரத்தி அடிக்கின்றன. அதனால் அவர்கள் மேலும் மேலும் கீழ்த்தரமாகிக் கொண்டே வருகின்றனர். அந்த நிலைமை ஏற்படுகிறபோது, மனிதன் நிலையில் மாறுகிறான்.தடுமாறுகிறான். தத்தளிக்கிறான். பித்தனாகிறான், பேயனாகிறான்.

பேராசையின் காரணமாக அவனுக்கு அமைந்திருக்கின்ற பெயரும் . வாழ்வுமே, அருவருப்புக்கு உள்ளாகின்றதாக மாறுகிறது.

மனிதன் கினிதன் புனிதன் என்ற இந்தப் பெயர்கள். நீங்கள் அறிந்த ஒன்று தான்.

மனிதன் என்றால் சிந்திக்கின்றவன். அழகாயிருப்பவன். நிதமும் அப்படியே வாழ்பவன். பிறரைக் கவர்கின்ற மன்மதன். இப்படியெல்லாம் பெருமைக்குரிய அர்த்தம் பொதிந்தவன் மனிதன்.

கினிதன் என்றால் பீடை பிடித்தவன். நோய் பிடித்தவன், கீழ்த்தரமான குணாதிசயங்களைக் கொண்டவன்.

புனிதன் என்றால், மனிதனுக்குள்ள இயற்கையான குணங்களில் செம்மையும் செழுமையும் உண்மையும் உயர்வும் திண்மையும் தேர்ந்த பண்பாளனாகவும் உள்ளவன்.

இப்பொழுது புரிந்திருக்குமே!

மனிதன் புனிதனாவதும், கினிதனாவதும் அவனவன் கையில்தான் இருக்கிறது

கை என்றால் ஒழுக்கம். அதாவது அவனவன் ஒழுக்கத்திலும் பழக்கதிலும் வழக்கத்திலும்தான் வாழ்க்கை அமைந்திருக்கிறது.

இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும்?