பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

7


எப்படி என்று பதில் சொல்வதற்கு முன் நாம் ஒன்று செய்வோம்.

நம்மை சுழற்றுகிற, ஆட்டி வைக்கிற, அச்சப்படுத்துகிற, அவமானம் என்ற சொல்லைப் பற்றி ஒரு சிறு ஆய்வு செய்வோம்.

அவமானம் என்றால் என்ன பொருள்?

அவமானம் என்றால் இழிவு, அவமதிப்பு, மான ஈனம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு.

இழிவு என்றால் என்ன?

ஈனம், கேடு, தாழ்வு, கேலி, இகழ்ச்சி, பெருமையைக் குலைத்தல், நிலைமையைக் குற்றப்படுத்துதல் என்று பொருள்.

இப்பொழுதுதான், நாம் ஒரு யதார்த்த நிலைக்கு வருகிறாம். சாந்த நிலைக்குள் வருகிறோம்.

அவமானம் என்றால், நமது பெருமையைக் குலைத்தல், மற்றவர்கள் முன் நம்மை இகழ்ச்சிப்படுத்துதல், நம் தூய்மையான மனதை குற்றப்படுத்தி களங்கப்படுத்துதல்.

நமது ஆற்றலைக் கேலி செய்தல், உயர்வுக்குக் கேடு செய்தல், இருக்கும் நிலையில் இருந்து தாழ்த்திவிடுதல், மீள முடியாத சூழ்நிலையில் தள்ளிவிடுதல் என்றெல்லாம் ஏற்படுவது உண்மைதான். மறுக்க முடியாததல்ல.

அவமானம் என்றதும் இப்படியெல்லாம் அர்த்தங்கள் இருக்கிறபோது, தைரியம் உள்ள நாமே ஆடிப்போய் விடுகிறோம். அந்தப் பக்கமே தலைகாட்ட முடியாமல், ஓடிப்போய்விடுகிறார்கள் மற்றவர்கள். ஏன்?

ஆனால் நாம் தைரியசாலிகள் அல்லவா!

விளையாட்டுக் களஞ்சியத்தின் வாசகர்கள் எல்லோரும் வேகம் நிறைந்த வியூகம் படைக்கும் விவேகிகள் அல்லவா!