பக்கம்:அவள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உச்சி வெய்யில் குளிர், பல் கிட்டிற்று. போர்வையை மேலே சுற்றிக் கொண்டு பாறைமீது உட்கார்ந்தபடி, பிள்ளையின் வருகைக்குக் கர்த்திருந்தார். மணி ரெண்டுக்கு மேலாறது இன்னும் காணோமே! நைட் ஷிஃப்டில் 12.30 மணிக்கே திரும்பவேண்டியவன். உலகில் உயிரிலாதது எதுவுமில்லை. கல்லானா லும் எங்களுக்கும் வளர்ச்சி உண்டு. உங்கள் கணக்கில் எத்தனையோ வருடங்களில், கால், அரை அங்குலம் கூடியிருப்போமாம். யார் யாரோ எத்தனை எத்தனை முறையோ, காலம் காலமாய் என்மேல் நடந்து சென்றிருப்பரோ! ஆனால் இந்தப் பெரியவர், இந்த நள்ளிரவில், என் மேல் உட்கார்ந்து தன் மகனுக்குக் காத்திருந்த வேளையில்தான், அவருடைய பிள்ளைப் பாசத்தின் நெஞ்சு நெகிழ்ச்சியில், என் ப்ரக்ஞையின் முதன் மூச்சு என்னுள் பாய்ந்திருக்க வேண்டும். ஒண்டியா சமைத்துச் சாப்பிடறான். ஒடிடல் சாப்பாடு ஒத்துக்கல்லியாம். கட்டுப்படியும் ஆகல்லே. ஆறு மாசத்துக்கொரு தடவை. ஊருக்கு வந்து தங்கும் அந்த ரெண்டு மூணு நாளில் அவனைப் பார்க்க வயிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/131&oldid=741471" இருந்து மீள்விக்கப்பட்டது