பக்கம்:அவள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உச்சி வெய்யில் § { நெகிழ்ச்சி உண்டென்று வந்திருப்பதால் கண்டுகொள் கிறேன். அந்தந்த சமயத்துக்கு உடல் பூரா பார்வை, உடல் பூரா செவி. உணர்வும் முன்னாலேயே இருந்திருக்கும். அதைத் தட்டி எழுப்பும் விழிப்புத்தான் புதிது. உணர்வின் ஏடுகள் புரள்கின்றன. முன்பின், இப்போ, எல்லாம் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்கின்றன. இது தான் நினைவு? என்மேல் ஏதோ மெத்தென்று வீசி ஒற்றி விழுந்து எழுகிறது. ஓ, நீ என்னை நட்பு பிடிக்கிறாயா? நீ தானே காற்று? "ஆம், நீ இப்பத்தான் தூக்கம் கலைந்திருக் கிறாய், இல்லையா? என்னைச் சோதரனாக்கொள். ஆம், உறவு எங்கேனும், யாரேனும் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா? சோதரனே, உன்னைச் சுந்திலும் விழித்துப் பார்.' மையிருள் என்மேல் கவிகின்றது. இப்போது மேகங்கள் வலுவிழந்து கலைகின்றன. தேய்ந்த நிலவின் இருண்ட வெளிச்சத்தில் என் விளிம்புகள் தெரிகின்றன. என் அடிவாரத்தில் பொட்டுகள் சொட்டினாற் போல் வீடுகள். கட்டான் கட்டானாய் வயல்கள். எதிருக்கெதிர் வீடுகள். நடுவே பாம்பு வளையில் ஒடும் பாதைகள். மனிதன் ஏன் ஒடியாடி அலை கிறானோ, இப்போது வீட்டுள் களைத்துத் துங்கு கிறான். அதுவும் என்ன நிச்சயம்? ஆனால் நான் காவல். நானும் பயப்படுகிறேன் என்று நினைத்துக் கொள்வதில் ஒரு பெருமிதம் உணர்கிறேன். எனக்கு இனி உற்க்கம் என்பதில்லை. இப்பத்தான்ே விழித் திருக்கிறேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/135&oldid=741475" இருந்து மீள்விக்கப்பட்டது