பக்கம்:அவள்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜனனி 157 எப்போதோ கேட்டமாதிரி இருந்தும் இந்தப் புதுக்குரல் அவளுக்குப் பயமாக இருந்தது. அவளையுமறியாது அவள் நாக்கு "நீ யார்?' என்னும் வினாவை உருவாக்க முயன்றது. 'நான் யார்? என்றுமே, நீ பிறப்பதற்கு முன்னரே முதல், உன்னிடம் இருந்துகொண்டு உன்னிடமிருந்து என்றுமே நீங்கா திருக்கிறேன். என்னைப் புரியவில்லையா? நீ உன்னைப் புரிந்துகொண்டால், என்னைப் புரிந்து கொள்வாய். ஏனெனில் நீயேதான் தான். நீ என்னைக் கண்ணால் கண்டது மறந்தாலும், என் குரலைக் காதில் கேட்டது ஞாபகம் இல்லையா? என்னைக் கண்டதும் கேட்டதும் ஞாபகம் இல்லையானாலும், என்னைக் காணவும் கேட்கவும் முயன்றதுகூட ஞாபகம் இல்லையா? யோசி யோசி! நன்றாய் யோசித்துப் பார்: $ திடீரென நினைவு வந்த அதிர்ச்சியில், ஜனனிக்கு இருளில் கண்கள் அகல விரிந்தன. குத்துவிளக்கில்... ப்ரபோ!' ஜனனி ஹோவெனக் கதறினாள். "ஆ! இப்பொழுது உனக்கு ஞாபகம் வருகிறது. நீ விளக்கைத் துண்டியபொழுது யாரைத் துண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில், நீயாக எடுத்துக்கொண்ட பிறப்பின் மாசும், காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் இப்பொழுது நேர்ந்த பூகம்பத் தினால் தீயே புரண்டதால், உன்னுள் புதைந்துபோன நான் இப்பொழுது வெளிவந்தேன்." 'என்னைக் கைவிட்டாயே என் கடவுளே!-' "ஜனனி, நீ என்னைவிட்டு ஒடிப்போனாய். ஆனால் நீயே நானாய் இருப்பதால் உன்னை விட்டு நான் ஓட முடியாது. உன்னுடன் ஒட்டிக்கொண்டு வந்தேன். வந்த என்னையும் உன்னுள் புதைத்துவிட்டாய். புதைத்தும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/201&oldid=741548" இருந்து மீள்விக்கப்பட்டது