பக்கம்:அவள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாrாயணி 185 மகளையே மணந்துகொண்டார். ஆகையால் நான் எனக்கு வந்ததைத் தப்ப முடியாது இருந்தாலும் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது எண்ணுவதை எண்ணியே தீரும். எண்ணங்களை அறவே ஒழிக்க முடியாது. முடிந்தவரை அடக்க முடிந்தால் அதுவே ஒசத்தி!' 'நானுந்தான் நினைத்துக் கொள்கிறேன்: ஒரொரு சமயம், நீங்கள் எப்படி வீணாய்ப் போய்விட்டீர்கள் என்று. என்னவோ ஆரம்பத்தில் ஜலதோஷ ஜூரம் என்று. தானே நினைத்தோம்.' "டாக்டர் என்னை வைத்துக்கொண்டு உன்னிடத்தில் தானே சொன்னார்? ஆத்திரத்துடன் கேலி பண்ணினார். 'அம்மா! உங்களுக்கு உங்கள் புருஷன் மிஞ்சனுமானால் பட்டணத்தை விட்டு எங்கேயாவது கிராமத்துக்கு ஒடிப் போய்விடுங்கள். இந்த இடத்து மூச்சை இன்னும் ஒரு நிமிஷம் கூட சுவாசிக்க இவர் லாயக்கில்லை. சுவாசப் பையில் ஒட்டை விழ எப்போடா என்று காத்துக்கொண் டிருக்கிறது!’ 'இன்று பாலத்தில் நாம் நின்றபோது ரயில் வந்ததே, அப்போது இதைத்தான் நினைத்துக்கொண்டேன். எட்டு வருஷங்களுக்கு முன்னால் இதே வண்டிதானே இந்த ஊரில் நம் இருவரையும் கக்கிவிட்டுச் சென்றது? நான் தான் முதலில் இறங்கினேன். தம்பூரைத் தோளில் மாட்டிக்கொண்டு பின்னால் நீங்கள் இறங்கினர்கள். உங்களுக்குக் கைகொடுத்து இறங்க வேண்டியிருந்தது. அவ்வளவு பலவீனமாய்ப் போயிருந்தீர்கள். அந்த மூனறு மாதங்களுக்குள்.” 'இப்போதுந்தான் எதற்கு உபயோகம்? உனக்குக் குழந்தையாகவே நானும் ஆகிவிட்டேன். பெண்களுக்குள் ஒரு வசனம் உண்டு; பெற்றது வயிற்றுப் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/229&oldid=741578" இருந்து மீள்விக்கப்பட்டது