பக்கம்:அவள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186 லா. ச. ராமாமிருதம் கொண்டது கயிற்றுப் பிள்ளை. எப்படி இருந்தால் என்ன? இருவர் மூவரானோம். அது நிமிஷத்தில் சேர்ந்ததா, வருஷத்தில் சேர்ந்ததா? அவன் முகத்திலிருந்து பத்து வருஷங்கள் சட்டென உதிர்ந்தன. பாபுவின் முதுகைத் தடவினான். நானும் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த நிமிஷத்தில் எதையுமே மனத்தில் ஒளித்து வைக்க முடியவில்லை. இந்த எட்டு வருஷங்களுக்குள் ஒருதடவை, எப்போது என்று சொல்லமாட்டேன், நானும் உங்களை விட்டுப் பிரிந்து போய்விட வேண்டும் என்று நினைத்தது உண்டு.” "ஏன்?' அவளை ஸ்வாரஸ்யத்துடன் கவனித்தான். 'ஏன் என்றால் என்னத்தைச் சொல்வது? நீங்கள் தான் சொன்னீர்களே, அதுமாதிரி ஒரு நிமிஷ புத்திதான். இப்படித் தோசியாய்ப் போய்விட்டேனே என்ற மனக் கசப்பு. பிறந்த வீட்டுச் சபலமும் இருக்கலாம். ஒரே எண்ணம் மனசை முற்றுகையிட்டுவிட்டால்தான் முன் புத்தி பின்புத்தியில்லாமல் அடித்துவிடுமே! என்னவோ நினைத்துக்கொண்டேன்; அவ்வளவுதான. நீங்கள் அசதியாய் உறங்கிக்கொண்டிருந்தீர்கள். பையன் விளை யாடப் போயிருந்தான். கடியாரத்தைப் பார்த்தேன். வண்டிக்கு நாலு நிமிஷங்களே இருந்தன. ஈரக் கையை மடியில் துடைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்." அவள் அவனைப் பார்க்கவில்லை. நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். 'நான் சொல்வதைச் சொல்லிவிடுகிறேன். இந்த நிமிஷம் என்னால் எதையுமே ஒளிக்க முடியவில்லை. நம்மிடையில் இது ஒன்றுதான் இருவருக்கும் தெரியாதது. அதையும் இல்லையென்று பண்ணிவிடுகிறேன். வயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/230&oldid=741580" இருந்து மீள்விக்கப்பட்டது