பக்கம்:அவள்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 லா. ச. ராமாமிருதம் 'அமலி, நீ பிக்கு." வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி.' 'அமலி, இவா நமக்காக வந்தாள்னு மகிழ்ந்து போறே, அவனவன் தன் தம்பட்டமடிக்க, தன் சுயவிளம் பரத்துக்கு, தன் பெருமையைக் காட்டிக்க வந்தாங்கடி! தாஸரதி nமந்தபுத்ரன் தன் புதுக் காரைக் காட்டிக்க. ரகு தான் சிங்கப்பூர் போன வைபவத்தைப் பீற்றிக்க மூணாமவன்-’’ 'ரவியை ஒண்னும் சொல்லாதீங்கோ. வந்த இடத் தில் இந்தச் சந்தோஷத்தில் ஒட்டமுடியாமல் பேந்தப் பேந்த முழிச்சுண்டு நேற்று ராத்திரி ரயிலுக்கே போயிட் டானே! உங்களிடம் சொன்னானா? அவன் பெண்டாட்டி விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக் காளாம்.’’ அமலி குரல் நடுங்கிற்று. ஆனால் அழவில்லை. கிழவருக்குத் 'திக்கென்று ஆகிவிட்டது. என்னிடம் யார் என்னத்தைச் சொல்றா?' என்று முணுமுணுத்தார். "படிச்சுப் படிச்சுக் காலில் விழாதகுறையாச் சொன் னேனே கேட்டானா? காதல் கலியாணம்! நன்னா வேணும்னு என் வாயாலே சொல்லல்லே. ஆனால் அவன் செஞ்சதை அவன்தானே அனுபவிச்சாகணும்! பெற்ற கடன் நாமும் அனுபவிக்கிறோம்.' 'வயத்தை ஒட்டிக்கறது. பெண்ணைப் பெத் தவாள், பெண்ணுக்குப் புத்தி சொல்லமாட்டாளோ? ஆனால் அவாதான் அவளைவிட முஸ்தீப்பா நிக்கறாளாம்.'

  • அதன் பேர்தான் பெரிய இடத்து சம்பந்தம்.'

'நான் போய், நாட்டுப் பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாமான்னு உடம்பு பறக்கறது.” "போ, கேளு-அவள் கொடுக்கறதை வாங்கிக் கட்டிண்டு வா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/236&oldid=741586" இருந்து மீள்விக்கப்பட்டது