பக்கம்:அவள்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 லா. ச. ராமாமிருதம் போவோமா?’’

Thanks நாகம்மா'-கூண்டுக்கிளி.

கூடத்தின் அந்தி இருளில், திடீரென பாஸ்கர் கன்னத் தில் உதடுகள் உராய்ந்தன. பாஸ்கர் மார் புள் பாறை ஏதோ உருகி உடைந்தாற் போன்ற பயங்கர இன்பம், கல்லலா? பனியா? நெய்யா? நீங்களா கறந்த பாலைத் தேடதேள்?'-அவள் விழிகள் ஸ்படிகத்தில் பளபளத்தன. கல் கண்ணிர் கசிந்தால் இவ்வளவு அழகா? மறுநாள் மாலை பாஸ்கர், ஆபீசிலிருந்து திரும்பி, உடுப்புகளைக் கழற்றி, உடம்பைச் சுத்தி செய்து கொண்டு பூஜையறையில் நுழைந்தால் -விக்ரஹத்தைக் காணோம். ரேணு குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். 'எனக்கு ரொம்ப நாளாகவே எண்ணம். இந்த மாதிரியான பிரதிஷ்டை, நமக்கு வழிபாடு வழி தெரியாமல் சம்சாரி வீட்டில் நீடித்திருப்பது சரியல்ல. அதனால் இன்று அவள் வந்த இடத்திலேயே கொண்டு போய் விட்டுவிட்டேன்." ஒரு கணம் ஒரு யுகம் கண்ணுக்குக் கண், கருவிழிக்குக் கருவிழி நேருக்குநேர் சலசல. பாஸ்கர் முதுகு திரும்பி னார். அவருக்குத் தெரிகிறதோ இல்லையோ, முதுகுக்கு உசிதம் தெரியும். ஆமாம், அவள் சொல்லுவதும் வாஸ்தவம்தான். அடுத்து, கொடுத்து வைத்தவனுக்கு கண் திறந்துவிட அவள் போக வேண்டாமா? அவர் கைவிரலுடன் இரண்டு பிஞ்சு விரல்கள் கோத்துக்கொண்டன. - 'அப்பா...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/314&oldid=741673" இருந்து மீள்விக்கப்பட்டது