பக்கம்:அவள்.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வீம்புக்கு மருதாணி 3鲁姆 வயது 18, 19 இருக்கும். தோளில் பை, கையில் டிபன் பாக்ஸ். 'என்னைத் தெரியல்லியா? கமலி.' 'ஒ' கேட்க ஆயிரம் கேள்விகள், பேச ஆயிரம் வார்த்தை கள். ஒரே சமயத்தில் முந்திக்கொண்டு நாக்கு நுனிக்கும் போட்டியிட்டன. 'அம்மா செளக்கியமா?' கத்தினேன். அவள் என்ன சொன்னாளோ, சொன்னதை பஸ் தன்னோடு அடித்துக் கொண்டு போய்விட்டது. கையை ஏதோ பலமாக ஆட்டுவதுதான் தெரிந்தது. ஜங்கிளில் திக்குத் தப்பி நின்றேன். தனக்கும் பயனின்றி, எதற்கும் பயனின்றி வெறும் வியர்த்தத்துக்கே ஒரு பிறவியில் உன் எண்ணம் என்ன, நியாயம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/353&oldid=741716" இருந்து மீள்விக்கப்பட்டது