பக்கம்:அவள்.pdf/365

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அபூர்வ ராகம் 品多故 இப்போது சொல்லிவிடுகிறேன். இதுதான் எங்கள் வாழ்க்கையின் அடிப்படையான பெருங்குறை. எங்கள் ஒற்றுமை. சில ஒ ற் று ைம க ள் இருக்கின்றன. நாசத்திற்கே வித்தான பயங்கரமான ஒற்றுமைகள். காற்றுடன் நெருப்பு, விளக்கோடு விட்டில், மூங்கிலோடு மூங்கில். அவள் கண்கள் திறந்தன. படுத்திருந்த போதிலும் பாய்ச்சலில் பதுங்கிய சிறுத்தைப்போல் ஜாக்கிரதை யானாள். 'ஏன் ? நான் என்னத்தைப் பண்ணிவிட்டேன்? என் மேல் என்ன கோபம்?' என்று கேட்கவில்லை. 'வெறுமென, இருந்து பார்ப்போம்!” என்றேன். உனக்கு உன் பிறந்த வீட்டிற்குப் போக வேண்டுமென்று இருக்காதா? நீ எனக்கு வைத்திருக்கும் சூனியத்திற்கு எவ்வளவு சக்தி என்று நான் அ றி ந் து .ெ கா ள் ள வேண்டாமா? எனக்கே சரியாய்ப் புரியவில்லை. அவளை ஏன் பிறந்த வீட்டுக்குப் போகச் சொன்னேன்? ஒருவர் சக்தியை ஒருவர் ஆழம் பார்க்க வேணுமென் றிருக்கலாம்-மிருகங்கள் தங்கள் பலத்தை ஆராய்வது போல், அல்லது அவள் என் அருகில் இருப்பது கனிந்த தழலின் அழகைக் கையில் ஏந்தி அனுபவிக்க முயல்வது போன்றிருக்கலாம். இருந்தும், சொன்னதும் ஏன் சொன்னேன் என்று மனம் அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டது. அவள் என்னைத் தகித்தாலும் அவளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அ.-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/365&oldid=741729" இருந்து மீள்விக்கப்பட்டது