பக்கம்:அவள்.pdf/406

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


362 லா. ச. ராமாமிருதம் நண்பகல் சொக்கல். நேரம் முதிர முதிர, அவள் வதங்கலுற்றாள். வேர் கழன்ற இலைபோல் கொஞ்சங் .ெ கா ஞ் ச மா ய் த் துவண்டு... 'என்ன குழந்தை ஒருமாதிரி ஆயிட்டே, உடம்பு சரி யில்லையா?” "அவர் நினைப்பு வந்துவிட்ட தம்மா." “என்ன அதுக்குள்ளேயுமா? சாயந்தரம்தான் போப் போவதாச் சொல்லிண்டிருக்கே! வெள்ளிக்கிழமையு மதுவமா." - "அவர் நினைப்பு வந்துட்ட தம்மா. தி ைன ப் பு வந்தால் விடாதம்மா. நொடியும் யுகம் அம்மா." 'நீ என்ன சொல்றேன்னு விளங்கல்லியே!” "புரியறதுக்கு ஒண்ணுமில்லேம்மா. அவர் பொறுமை கடலினும் பெரிது. கோபம் கடல் பற்றி எரியும்போல். நான் போகணும். அகிலாவுக்குப் பயத்தில் உடல் சிலிர்த்தது. ‘'நீ வந்த அதிசயம் என்ன, போற சுருக்கு என்ன? ரெண்டுமே எனக்கு அப்பாற்பட்டது. சரி வா, பின்னி விடறேன். இதுமாதிரி சடையைப் பின்ன எத்தனையோ கொடுத்து வெச்சிருக்தனும், இது கூந்தலா, காட்டா றா, பின்னப் பின்னச் சோம்பிக்கொண்டே, தடுமனாய்ப் பாம்பு நீண்டது.

  • கமலா, என் பட்டுப் புடவையிலேயே அவரிடம் போ, என் நினைவாயிருக்கட்டும்.'

'ஐயையோ அதெல்லாம் வேண்டாம். எப்படி வந்தேனோ அப்படித்தான் போகணும். அவர் அப்படி.." இப்படியும் ஒரு புருஷன். அவன்மேல் இவளுக்கு இத்தனை மோகம்! ஒண்னும் புரியல்லே. சரி வா, போகலாம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/406&oldid=741775" இருந்து மீள்விக்கப்பட்டது