பக்கம்:அவள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 371

"ஏன், உனக்குப் புதுப் புடவை வருமேன்னு பார்க்கறியா"—அண்ணா.

"அம்பி எனக்கு இப்படித் தனியாகக் குடித்தனம் பண்ணி அலுத்துப்போச்சு. ரெண்டுபேரும் ஒண்ணாயிருப்போம். இன்னும் சத்தே பெரிய வீடா தானே பார்க்கறேன். பிரிய நேர்ந்தால் நீங்கள் அண்ணன் தம்பியால் நேரணுமே அன்று, நாங்கள் ஓரகத்திகள் ஒற்றுமைக்கு நான் உத்தரவாதம்.”

உள்ளூரச் சிரிப்பு வந்தது. இதோ அண்ணா 'றாபனா' பண்ணுகிறான்.

"நீ மனப்பால் குடிச்சுண்டேயிரு. அவனுக்குப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வரன் தேவைப்படவில்லை. காதல் பண்ணி முடிந்தால் பரீக்ஷையும் வைத்துத் தேர்ந்தெடுக்கப் போறான். மேனாட்டில் கலியாணத்துக்கு முன் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகச் சேர்ந்து கூடக் கொஞ்சகாலம் வாழ்கிறார்களாம். என்ன அம்பி, அப்படித்தானே?”

எரிச்சலாய் வருகிறது. என்ன பண்ண முடிகிறது?

"ஆமாம். உன்னைப்போல் அதிர்ஷ்டம் எல்லாருக்கும் வாய்க்குமா" என்றேன்.

மன்னி குறுக்கிட்டு, "அம்பி,அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. நான் சொல்றேன், உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திண்டிருக்கு. ஊரில் எங்கள் வீட்டுக் கெதிரேயே ஒரு பெண் உங்களுக்காகவே வளர்றா. படிப்பு சுமார் தான். ஆஹா, ஒஹோன்னு செய்ய முடியாது. பெண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணன்தான் செய்யனும். அவன் உத்யோகம் சுமார்தான். வீட்டுக் காரியம் மாங்குமாங்குனு செய்வாள். என் சமையலை நீங்கள் மெச்சிக்கறேள். அவள் கைப் பக்குவத்துக்கு என்ன சொல்லப்போறேளோ? மருந்து வெச்சமாதிரி பின்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/415&oldid=1497266" இலிருந்து மீள்விக்கப்பட்டது